செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் பகுதியில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியை நடத்திவருபவர் சிவசங்கர் பாபா. தனது ஆசிரமத்தில் படித்த பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர் பாபாவை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இவ்வழக்கில் ஜாமீன் கோரி, சிவசங்கர் பாபா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இது குறித்து விசாரித்த நீதிமன்றம், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. சிவசங்கர் பாபா தனது பள்ளி மற்றும் ஆசிரமத்துக்கு செல்லக் கூடாது. மேலும் சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்தால் அவருக்கு கொடுத்த ஜாமீன் ரத்து செய்யப்படும். மேலும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என தெரிவித்துள்ளது.
சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.