Published:Updated:

பாலியல் வன்கொடுமை: மரண தண்டனைக் கைதிகளை விடுவித்த உச்ச நீதிமன்றம்- பாதிக்கப்பட்ட குடும்பம் அதிர்ச்சி

தீர்ப்பு

``கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் குடும்பம் அனுபவித்த துயரங்களை நீதிபதிகள் புறக்கணித்துவிட்டனர்." - பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

பாலியல் வன்கொடுமை: மரண தண்டனைக் கைதிகளை விடுவித்த உச்ச நீதிமன்றம்- பாதிக்கப்பட்ட குடும்பம் அதிர்ச்சி

``கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் குடும்பம் அனுபவித்த துயரங்களை நீதிபதிகள் புறக்கணித்துவிட்டனர்." - பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

Published:Updated:
தீர்ப்பு

டெல்லியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று கைதிகளை, உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக கடந்த 2012-ம் ஆண்டு, டெல்லியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். பின்னர் கடத்தல் நடந்த சில நாள்களுக்குப் பிறகு, ஹரியானாவின் ரேவாரி மாவட்டத்தில் ஒரு வயல்வெளியில், எரிக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

அதையடுத்து 2014-ல் இந்த வழக்கு தொடர்பாக, பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய குற்றங்களின்கீழ் ரவிக்குமார், ராகுல், வினோத் ஆகியோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான நீதிமன்ற அமர்வு, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்து, மூவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இதைக் கேட்ட பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இது குறித்து ஊடகத்திடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, ``நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. அதனால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இங்கு வந்தோம். ஆனால் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. சட்டமே இப்படிச் செய்தால், இனி சட்டத்தின் மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும். நீதிபதிகள் மற்ற வழக்கைப்போலவே இந்த வழக்கையும் கருதி, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய அனுமதித்தனர். அதுமட்டுமல்லாமல், கடந்த 10 ஆண்டுகளாக நானும், என் குடும்பத்தினரும் அனுபவித்த துயரங்களை நீதிபதிகள் புறக்கணித்துவிட்டனர்" என்று வேதனையோடு கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவு தொடர்பாக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும் என்றும், தீர்ப்பை அறிவிக்கும்போது உத்தரவுக்கான அடிப்படையைக் குறிப்பிடாதது ஆச்சர்யமாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.