Published:Updated:

புகார் கொடுத்ததால் மூவரை வெட்டிக்கொன்ற நபர்.. தூக்குத் தண்டனை விதித்த தென்காசி நீதிமன்றம்!

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முத்துராஜ்
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முத்துராஜ்

மனநிலை சரியில்லாத பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததைக் காவல்துறையில் புகார் செய்ததால், அந்தக் குழந்தையின் தாய் மற்றும் தாத்தாவை வெட்டிக் கொன்ற கொலையாளி மீதான வழக்கு தென்காசி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியைச் சேர்ந்தவர், முருகன். அவரின் மனைவி பேச்சித்தாய். அவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள். முதல் மகளுக்கு மனநிலை சரியில்லை. பேச்சித்தாயின் தந்தை கோவிந்தசாமியும் அவர்களுடனே வசித்துவந்தார். 

`தயாராகும் தூக்கு மேடைகள்; ஒரே நேரத்தில் தூக்கு?' -நிர்பயா குற்றவாளிகளை நெருங்கும் தண்டனை

பேச்சித்தாய் குடும்பத்தினர் ஆடு, மாடு மேய்ப்பதற்காகவும் கூலி வேலைக்காகவும் சென்ற பின்னர் அதே பகுதியில் குடியிருந்து வந்த முத்துராஜ் என்ற ஆண்டவர் மனநிலை சரியில்லாத பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இது பற்றி தெரியவந்ததும் முருகனின் குடும்பத்தினர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்கள்.

தன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த முத்துராஜ் என்ற ஆண்டவர் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி நெட்டூர் வீராணம் சாலையில் நின்றிருந்த கோவிந்தசாமியை வெட்டினார். அதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 

`வீட்டுக்குள்ள யாரும் போகக் கூடாது!' -நெல்லையில் மனநலம் பாதித்த மகனால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்

அதன் பின்னர் அருகில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த கோவிந்தசாமியின் மகள் பேச்சித்தாய் மற்றும் அவரின் இரண்டாவது மகள் மாரியம்மாள் ஆகியோரை வெட்டினார். இந்தக் கொடூரச் சம்பவத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பரபரப்பான இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த தென்காசி போலீஸார், கொலையாளி முத்துராஜை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் இன்று தீர்ப்பளித்தார். 

குற்றவாளி முத்துராஜ்
குற்றவாளி முத்துராஜ்

அதில், `கொடூரமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை முத்துராஜ் கொலை செய்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கிறேன்’ எனத் தீர்ப்பளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு