Published:Updated:

`முதலில் 7 ஆண்டுகள்... அதன்பின்னர் ஆயுள்!’- தேனியில் தம்பி கொலை வழக்கில் அண்ணனுக்குத் தண்டனை

பாண்டியராஜன்
பாண்டியராஜன்

தன் சொந்த தம்பியைக் கொலை செய்த அண்ணனுக்கு ஒரு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம் சிவாஜி நகரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன், அவரின் தம்பி சுந்தரபாண்டியன். இருவருக்கும் இடையே பணம் சம்பந்தப்பட்ட பிரச்னை இருந்துவந்துள்ளது. அடிக்கடி இருவரும் சண்டை போட்டுவந்துள்ளனர்.

தேனி நீதிமன்றம்
தேனி நீதிமன்றம்
குப்பைத்தொட்டியாகும் தேனி வால்கரடு!

இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி இருவருக்குமான சண்டை முற்றிப்போன நிலையில், கயிற்றை எடுத்து தம்பி சுந்தரபாண்டியனின் கழுத்தை நெரித்து கொலை செய்தார் அண்ணன் பாண்டியராஜன். பின்னர் உடலை, அருகே இருக்கும் மயானத்துக்குக் கொண்டு சென்ற பாண்டியராஜன், பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

பாண்டியராஜன்
பாண்டியராஜன்

இதையறிந்த தாயார், தேனி காவல்நிலையத்தில் புகார் கூறவே, உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், பாண்டியராஜனைக் கைது செய்தனர். பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தன் சொந்த தம்பியைக் கொலை செய்து எரித்த சம்பவம் தேனி நகரில் பரபரப்பாக பேசப்பட்டது.

வழக்கு விசாரணை தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த நிலையில், விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பு வழங்கினார். தன் தம்பியைக் கொலை செய்ததற்காக பாண்டியராஜனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும், அதைக் கட்ட தவறினால் ஓர் ஆண்டு கூடுதல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட தேனி ஊராட்சித் தலைவர்!- பழிவாங்கினாரா ஓ.பி.எஸ்?

மேலும், கொலை செய்து, தடயங்களை மறைக்க முயற்சி செய்த குற்றத்துக்காக 7 ஆண்டு சிறைத் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும், அதைக் கட்டத் தவறினால் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. முதலில் 7 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து முடித்த பின்னர் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார். தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன், பாண்டியராஜன் மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின் செல்ல