Published:Updated:

புதுக்கோட்டை: போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்தபோது அத்துமீறல்! - சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்

அஜித்குமார்

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தவர், கடந்த 2021, பிப்ரவரி 25-ம் தேதி 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள அரசர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (22). கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி, தனது வீட்டின் அருகே வசித்துவந்த 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துவந்துள்ளார். இந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் அறந்தாங்கி போலீஸார் அஜித்குமாரைக் கைதுசெய்தனர். இந்த வழக்கின் கீழ் சிறைக்குச் சென்ற அஜித்குமார் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதற்கிடையே, ஜாமீனில் வெளியே வந்தவர் கடந்த 2021-ம் ஆண்டு, பிப்ரவரி 25-ம் தேதியும் 10 வயது சிறுமியின் வாயைப் பொத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். இது குறித்து அறந்தாங்கி போலீஸார் வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் மீண்டும் கைதுசெய்தனர். அடுத்தடுத்து இரண்டு போக்சோ வழக்குகள் பதிவான நிலையில், அஜித்குமார்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

புதுக்கோட்டை: போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்தபோது அத்துமீறல்! - சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்

10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில், ஏற்கெனவே அஜித்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இரண்டாவதாக போக்சோவில் கைதுசெய்யப்பட்ட வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்டில் நேற்று (பிப்ரவரி 1-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, அஜித்குமாருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால், மேலும் ஆறு மாதச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து அஜித்குமாரை மீண்டும் திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism