Published:Updated:

``வரி விலக்கு கேட்க விஜய்க்கு முழு உரிமை உண்டு!’’ - கார்த்தி சிதம்பரம் காட்டம்

கார்த்தி சிதம்பரம்
News
கார்த்தி சிதம்பரம்

``மனுவில் என்ன கேட்கப்பட்டிருக்கிறது, அது சட்டப்படி சரிதானா என்பதைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, மனுதாரர் யார் என்று பார்க்கக் கூடாது. மனுதாரர் என்பவர் நடிகர், தொழிலதிபர், மருத்துவர் என யாராகவும் இருக்கலாம். சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே!'' - கார்த்தி சிதம்பரம்.

நடிகர் விஜய்யின் சொகுசு கார் வரி விலக்கு விவகாரம் மீண்டும் பரபரப்புச் செய்தியாகியிருக்கிறது. நடிகர் விஜய்யின் சொகுசு கார் வரி விலக்கு தொடர்பான வழக்கில், கடந்த வாரம் தீர்ப்பு வெளியானது. இதில், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்ததோடு, விஜய் குறித்து நீதிபதி தெரிவித்திருந்த விமர்சனங்களும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இதையடுத்து, இந்தத் தீர்ப்புக்கு எதிராக விஜய் தரப்பு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த விசாரணையில், 'சொகுசு கார் வரிவிலக்கு தொடர்பான தனது மேல்முறையீட்டு வழக்கை தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு ஏற்க வேண்டும்' என்ற விஜய்யின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

விஜய்
விஜய்

2012-ம் ஆண்டு, தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார் நடிகர் விஜய். அண்மையில் வெளியான இந்த வழக்கின் தீர்ப்பில், `சமூகநீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; கட்டாயப் பங்களிப்பு. நடிகர்களுக்கு வானத்திலிருந்து பணம் வரவில்லை. ஏழை மக்களிடமிருந்துதான் அவர்களுக்குப் பணம் கிடைக்கிறது' என்றெல்லாம் மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததோடு, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தார் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தத் தீர்ப்பால் மன வருத்தத்துக்குள்ளான விஜய் தரப்பு, ``சமூகத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, வரி விதிப்பிலிருந்து யாரும் விலகி ஓடவோ, வெளியேறவோ முடியாது. அது விஜய் சாருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், இப்போது நீதிபதி ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து, அபராதமும் விதித்திருக்கிறார். எனவே, தீர்ப்பில் எங்களுக்கு இருக்கும் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறோம். அதாவது, விஜய் மீது விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்யவும், தனி நீதிபதியின் விமர்சனங்களை திரும்பப் பெறக்கோரியும் மேல் முறையீடு செய்கிறோம்'' என்று மறுபடியும் நீதிமன்றப் படியேறியது!

ரோல்ஸ் ராய்ஸ் கார்
ரோல்ஸ் ராய்ஸ் கார்

இதற்கிடையே, `வரி குறைப்பு கேட்பது குடிமக்களின் உரிமை; அவர்களை நடிகர் என்று பார்ப்பது தவறு' என்று ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்திடம் இந்த விவகாரம் குறித்துப் பேசியபோது,

``எல்லா வரியும் எல்லோருக்கும் பொருந்தாது. ஏனெனில், வருமான வரித்துறையினர் சில சமயங்களில் பொருத்தமற்ற வரிகளைக்கூட சிலர் மீது விதித்துவிடுவார்கள். இது போன்ற சமயங்களில் விதிக்கப்பட்ட வரியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரிக் கேட்பதற்கு எல்லோருக்குமே உரிமை இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதாரணமாக என்மீதுகூட இது போன்று நிறைய வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. 'இங்கிலாந்தில் சொத்து வாங்கியிருப்பது வரி ஏய்ப்பு' என்று சொல்லி வழக்கைத் தாக்கல் செய்திருப்பார்கள். பின்னர் 'அந்தச் சொத்து வாங்கப்பட்ட வழிமுறைகள், வரி செலுத்தவேண்டிய தேவையில்லை' என்பதற்கான ஆதாரங்களை நான் தாக்கல் செய்து வரிவிலக்கு பெற்றிருக்கிறேன். எனவே, வரிமான வரித்துறை நம்மை வரி கட்டச் சொல்லிவிட்டதாலேயே, அதெல்லாம் சரியென்பதாகிவிடாது.

நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார்
நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார்

ஏனெனில், வருமான வரித்துறை என்பது சில சமயங்களில் சட்ட நுணுக்கங்களைச் சரிவரப் புரிந்துகொள்ளாமலேயேகூட நம் மீது வரியைச் சுமத்திவிடும். இன்னும் சில சமயங்களில் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளின் பின்னணியில்கூட நம் மீது வரி சுமத்தப்படலாம். இது போன்ற சமயங்களில், 'இந்த வரி எனக்குப் பொருந்தாது. எனவே இதிலிருந்து எனக்கு விலக்களியுங்கள்' என்று நம்முடைய உரிமையைக் கோர முடியும். அதன் பின்னர் நீதிமன்ற விசாரணையைப் பொறுத்து, சட்டப்படி இவருக்கு வரி விதிக்கலாம் என்றோ அல்லது வரி விதிக்க வேண்டிய தேவையில்லை என்றோ தீர்ப்பாகலாம்! மற்றபடி 'இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் வரி விலக்கே கேட்கக் கூடாது' என்று சொல்வது ஒருபோதும் நியாயமாக இருக்காது!

மனுவில் என்ன கேட்கப்பட்டிருக்கிறது, அது சட்டப்படி சரிதானா என்பதைத்தான் பார்க்கவேண்டுமே தவிர, மனுதாரர் யார் என்று பார்க்கக் கூடாது. மனுதாரர் என்பவர் நடிகர், தொழிலதிபர், மருத்துவர் என யாராகவும் இருக்கலாம். சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே!'' என்றார்.

இதையடுத்து, ``கோடிக்கணக்கான மக்களுக்கு முன்னுதாரணமாக நடிகர் விஜய் இருக்கிறார். படங்களில் ஹீரோயிசமாக நடிப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் தங்கள் செயல்பாட்டைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் பார்வை நியாயமானதுதானே?'' என்ற கேள்வியை முன்வைத்தோம். இதற்கு பதிலளித்துப் பேசியவர்,

``இல்லையில்லை.... தீர்ப்பு சொல்லும்போது சட்டத்துக்கு அப்பாற்பட்டு நீதிபதிகள் தங்களது தனிப்பட்ட கருத்துகளைச் சொல்வார்கள். தீர்ப்புக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

விஜய்
விஜய்

'விஜய் ஒரு நடிகர்; எனவே வரி விலக்கு கேட்கக் கூடாது' என்பதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதாவது, 'சட்டப்படி இந்த வரி எனக்குப் பொருந்தாது; எனவே விலக்களியுங்கள்' என்றுதான் அவர் கோரியிருக்கிறார். ஆக, நீதிமன்றமும் இந்த வரிவிதிப்பு சட்டப்படி அவருக்குப் பொருந்துகிறதா, இல்லையா என்பதைத்தான் பார்க்க வேண்டுமே தவிர... 'நீ நடிகர்... அதனால் கேட்கக் கூடாது' என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை.

அப்படியென்றால், 'நீ டாக்டர்... எனவே கேட்கக் கூடாது, நீ வக்கீல் அதனால் கேட்கக் கூடாது' என்றெல்லாம் வகை வகையாகப் பிரித்துக்கொண்டிருப்பது எப்படிச் சரியாகும்? இல்லை இப்படித்தான் கேட்பீர்கள் என்றால், 'இனி நடிகர்களெல்லாம் வரி விலக்கு கேட்கக் கூடாது' என்று புதிதாக ஒரு சட்டத்தை இயற்றிவிடலாமே! அப்படி இயற்றினாலும்கூட, 'துணை நடிகர்கள் வரி விலக்கு கேட்கலாமா, காமெடி நடிகர்கள் கேட்கலாமா...' என்றெல்லாம் கேள்விகள் எழும். சட்டம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதானே! குடிமக்கள் எல்லோருக்குமே நீதிமன்றம் செல்லும் உரிமை இருக்கிறது என்கிறபோது, விஜய்க்கு மட்டும் அந்த உரிமை எப்படி இல்லாமல் போகும் என்பதுதான் என் கேள்வி!'' என்கிறார் அழுத்தமாக!