Published:Updated:

`இது ரத்து செய்யப்பட வேண்டியது!'- சர்வே வழக்கில் விகடன் நிருபர், புகைப்படக் கலைஞருக்கு ஜாமீன்

காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் பத்திரிகைச் சங்கங்களும் கண்டனம் தெரிவித்தன.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

குடியுரிமைச் சட்டம் பற்றி தமிழக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி விகடன் சார்பில் சர்வே எடுக்கப்பட்டது. இதில் அவர்களின் கருத்தை மட்டும் அறியும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

விகடன் நிருபர்கள் மீது வழக்கு
விகடன் நிருபர்கள் மீது வழக்கு

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள முகாம்களிலும் இந்த சர்வே எடுக்கப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமாரி மாவட்டம், ஞாராம்விளை, கோலிவிளை முகாம்களில் சர்வே எடுத்ததற்காக மார்த்தாண்டம், களியாக்கவிளை காவல் நிலையங்களில் நிருபர் சிந்து, புகைப்படக்கலைஞர் ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் பத்திரிகைச் சங்கங்களும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. ``இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும் கருத்துக் கணிப்பு எடுப்பது பத்திரிகையாளரின் கடமை என்றும் இதற்காக வழக்குப் பதிவு செய்வது சட்ட விரோதமானது" என்றும் நிருபர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் வாதம் செய்தார்.

வழக்கு
வழக்கு

``இது பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்ற வாதத்தை எடுத்துக்கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், `இது ரத்து செய்யப்பட வேண்டிய வழக்கு' என்று தனிப்பட்ட முறையில் கருத்து கூறினார். பின்பு, சம்பந்தப்பட்ட இருவருக்கும் நிபந்தனைகள் இல்லாத பிணை ஆணையை வழங்கி உத்தரவிட்டார்.