Published:Updated:

திருமண ஆசைகாட்டி ஏமாற்றிய இளைஞர்; பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு! -12 வருடங்களுக்குப் பிறகு நீதி!

நீதி
News
நீதி

இளம்பெண் ஒருவரைக் காதலித்து, நெருங்கிப் பழகிவிட்டு, திருமணம் செய்துகொள்ள மறுத்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை; ரூ.25,000 அபராதம் விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், முகையூர் அருகேயுது அந்திலி கிராமம். கடந்த 2009-ம் ஆண்டு, இந்த கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண்ணும், பழ வியாபாரி சுரேஷ் என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணிடம், "உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்" என்று ஆசைவார்த்தைகளைக் கூறி, நெருங்கிப் பழகிவந்திருக்கிறார் சுரேஷ். இந்நிலையில் கர்ப்பம் அடைந்த அந்த இளம்பெண், தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி சுரேஷிடம் மன்றாடிக் கேட்டபோதும், அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்திருக்கிறார். இதனால் மனவேதனையடைந்த அந்தப் பெண், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிந்து விசாரித்துள்ளனர் காவல்துறையினர். இந்த நிலையில், திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே அந்தப் பெண், பிரசவத்துக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பெண் குழந்தை ஒன்று இறந்த நிலையிலேயே பிறந்திருக்கிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அந்தப் பெண்ணும், ஒரு வாரத்திலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நீதிமன்ற வளாகம் - விழுப்புரம்
நீதிமன்ற வளாகம் - விழுப்புரம்

இது தொடர்பான வழக்கு, விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. அனைத்துச் சாட்சிகளின் விசாரணைகள் முடிந்த நிலையில், நேற்று (30.11.2021) அதிரடித் தீர்ப்பை அறிவித்திருக்கிறார் நீதிபதி சாந்தி. இளம்பெண்ணை ஏமாற்றிய சுரேஷுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டணையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார். இந்த அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், மேலும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சுரேஷ்.