Published:Updated:

`கேட்டது `வெஜ்'; வந்தது `நான்வெஜ்'!'- ஜொமோட்டோவுக்கு `ஷாக்' கொடுத்த நுகர்வோர் நீதிமன்றம்

கலிலுல்லா.ச

வழக்கறிஞர் ஒருவருக்கு வெஜ் உணவுக்குப் பதிலாக மாற்றி அசைவ உணவை அனுப்பிய ஜொமோட்டோவுக்கு புனே நுகர்வோர் நீதிமன்றம் 55,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஜொமோட்டோ
ஜொமோட்டோ

ஆன்லைன் டெலிவரி ஆப்கள் சில சமயங்களில் சொதப்பிவிடுகின்றன. அப்படியொரு சொதப்பல்தான் புனேவில் நிகழ்ந்துள்ளது. வழக்கறிஞர் சண்முக் தேஷ்முக் என்பவர் ஜொமேட்டோ செயலி மூலம் பனீர் மசாலாவை ஆர்டர் செய்துள்ளார். தனக்கான உணவு வரும் என காத்திருந்து உணவைப் பிரித்துப்பார்த்த அவருக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது.

பன்னீர் மசாலா
பன்னீர் மசாலா

சைவப் பிரியரான அவருக்கு சிக்கன் மசாலாவைக் கொடுத்து ஏமாற்றத்தையும் கூடவே பரிசாக அனுப்பியுள்ளது. இதனால் கடுப்பான அவர், புனே நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரை விசாரித்த நீதிமன்றம் ஜொமேட்டோவுக்கு 55,000 ரூபாய் அபராதம் விதித்து ஷாக் அளித்தது.

முன்னதாக பனீர் மசாலாவும், சிக்கன் மசாலாவும் ஒரே மாதிரியாக இருந்ததால், தேஷ்முக்கால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை அதை சாப்பிட்ட பின்னரே, `ஓ இது சிக்கன் மசாலா’ என்று உணர்ந்துள்ளார். இது தொடர்பாக ஜொமோட்டோ நிறுவனம், `உணவு மாற்றப்பட்டு, வழங்கப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. அதற்கு சம்பந்தப்பட்ட உணவகம்தான் பொறுப்பு.

நாங்கள் டெலிவரி மட்டுமே செய்வோம்” என்று தெரிவித்துள்ளது.

ஆன்லைன் ஃபுட் டெலிவரி
ஆன்லைன் ஃபுட் டெலிவரி

எப்படியிருந்தாலும், நீதிமன்றம் ஜொமோட்டோ நிறுவனத்துக்கு சேவை குறைப்பாட்டுக்காக 50,000 ரூபாய் அபராதமும், வாடிக்கையாளருக்கு மனஉளைச்சல் ஏற்பட்டதற்காக 5,000 ரூபாய் விதித்த நீதிமன்றம், 45 நாள்களில் சம்பந்தபட்டவரிடம் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.