Published:Updated:

பீட்சா ஆர்டரை ரத்துசெய்த Zomato... வாடிக்கையாளருக்கு ரூ.10,000 செலுத்த நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

”பீட்சா ஆர்டர் ரத்துசெய்யப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ 10,000 செலுத்துமாறு இந்திய ஆன்லைன் உணவு விநியோக தளத்துக்கு உத்தரவிட்டப்படுகிறது.” - நுகர்வோர் ஆணையம்

பீட்சா ஆர்டரை ரத்துசெய்த Zomato... வாடிக்கையாளருக்கு ரூ.10,000 செலுத்த நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

”பீட்சா ஆர்டர் ரத்துசெய்யப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ 10,000 செலுத்துமாறு இந்திய ஆன்லைன் உணவு விநியோக தளத்துக்கு உத்தரவிட்டப்படுகிறது.” - நுகர்வோர் ஆணையம்

Published:Updated:

சண்டிகர் மாநிலத்தில் அஜய்குமார் சர்மா என்ற நபர், கடந்த 2020-ம் ஆண்டு இரவு 10:15 மணியளவில் Zomato செயலியைப் பயன்படுத்தி, இத்தாலி ட்ரீட் பீட்சாவிலிருந்து பீட்சா ஆர்டர் கொடுத்திருக்கிறார். இதற்காக டெலிவரி செய்வதற்கான பணம் ரூ.10 உட்பட paytm மூலம் ரூ.257 கட்டணத்தையும் செலுத்தியிருக்கிறார். ஆனால், சரியான நேரத்தில் உணவு டெலிவரி செய்யப்படாது என அறிவித்து ஸொமேட்டோ, பீட்சா ஆர்டரை ரத்துசெய்திருக்கிறது. மேலும் அவர் செலுத்திய தொகை திரும்ப அனுப்பப்படும் என்றும் கூறியிருக்கிறது.

பீட்சா
பீட்சா

இதைத் தொடர்ந்து அஜய்குமார் சர்மா Zomato வாடிக்கையாளர் மையத்தை அழைத்து, ”சரியான நேரத்தில் உணவு டெலிவரி செய்ய முடியாவிட்டால் ஏன் எனது ஆர்டரை ஏற்க வேண்டும்... உணவு சரியான நேரத்தில் டெலிவரி செய்யப்படும் என்று விளம்பரத்தில் கூறும் வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள் அல்லது அந்த விளம்பரப் பிரசாரத்தை திரும்பப் பெறுங்கள்” எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். மேலும் இது தொடர்பாக, மாவட்ட ஆணையத்தில் புகார் அளித்தார். அது ஆரம்பகட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. பின்னர் மாநில ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். புதுடெல்லியிலுள்ள நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆணையரிடமும் புகார் அளித்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
டெலிவரி
டெலிவரி

இதைத் தொடர்ந்து, சண்டிகரில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராஜ் சேகர் அத்ரி மற்றும் நீதிபதி ராஜேஷ் கே ஆர்யா ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து வழங்கிய தீர்ப்பில், ``2020-ம் ஆண்டில் பீட்சா ஆர்டர் ரத்துசெய்யப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ 10,000 செலுத்துமாறு இந்திய ஆன்லைன் உணவு விநியோக தளத்துக்கு உத்தரவிட்டப்படுகிறது. கூடுதலாக, உணவு விநியோக தளம் வாடிக்கையாளருக்கு இலவச உணவைவும் வழங்க வேண்டும்.

Zomato
Zomato

ஏனென்றால், ஆர்டரை ரத்துசெய்தது, `ஸொமேட்டோ பயனர்கள் தங்கள் உணவைச் சரியான நேரத்தில் பெறுவார்கள் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவார்கள்’ என்ற அவர்களின் பிரசாரத்தை மீறுவதாகும். மேலும், நள்ளிரவு நேரத்தில் அந்த நபர் தனது குழந்தைகளுக்கு உணவளிக்காமல் இருந்ததாக அவரின் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, அவரின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இனி இதுபோல நடக்காமலிருக்க சரியான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு உத்தரவிடுகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.