‘மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயம்’ என்கிற மொழித் திணிப்பிலிருந்து தமிழகத்தில் பின்வாங்கிவிட்டது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு. ஆனாலும் ரயிலுக்கு பெயரிடுவது தொடங்கி அரசு அலுவலகங்களில் அறிவிப்பு பலகைகளில் மொழி மாற்றம் செய்வது வரை இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைத் திணித்துவருகிறது பி.ஜே.பி அரசு. மாநில மொழிகளைப் பாதுகாக்கவும் இந்தி திணிப்பைத் தடுக்கவும் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படியான சூழலில்தான் ‘உயர் நீதிமன்றத்தில் தமிழ் போராட்டக் குழு’, ‘தமிழ்த் தேசிய வழக்குரைஞர் நடுவம்’, ‘தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்’ ஆகியவை இணைந்து மதுரை உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் மொழி உரிமைகள் கருத்தரங்கை நடத்தின. இதில் கலந்துகொண்டவர்கள் பேசியதிலிருந்து...

கார்கா சட்டர்ஜி - வங்க மொழி அறிஞர்

‘‘இந்திய விடுதலைப் போராட்டம் என்பது, ‘அனைத்து தேசிய இன மக்களின் உரிமைகளும் பாதுகாத்துக் கொடுக்கப்படும்’ என்கிற உறுதிமொழியின் அடிப்படையில், பல்வேறு மொழி பேசுவோரும் இணைந்து நடத்தி, வெற்றி பெற்ற போராட்டம். அதன் அடிப்படையில்தான், ‘இந்தியா என்பது ஒற்றை நாடல்ல, பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம்’ என்று அரசிய லமைப்புச் சட்டமும் கூறுகிறது. ஆனால், அந்த உறுதிமொழியை இப்போதைய பி.ஜே.பி நடுவண் அரசு காப்பாற்றவில்லை. தமிழகம் மட்டுமன்றி இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்திலும் இந்தி மொழி திணிக்கப்படுகிறது. இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சி முறை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியமான, அடிப்படை அங்கம். ஒன்றிய அரசால், மாநில உரிமைகள் மீறப்படும் நிலையில், இந்திய ஒன்றியம் என்கிற கருத்துருவே சிதைந்துபோகிறது. இந்த நிலை இப்போது இன்னமும் தீவிரமாகிவிட்டது.’’

ஆழி செந்தில்நாதன் - மொழி உரிமைச் செயற்பாட்டாளர்

‘‘2015-ம் ஆண்டு மொழிப்போரின் 50-வது ஆண்டை முன்னிட்டு சென்னையில் மொழி உரிமைகள் மாநாடு நடத்தப்பட்டது. அதில் இந்தி அல்லாத இந்திய மொழிப் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர். ‘இன்று எங்கள் மொழி பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்குத் தமிழ்நாட்டில் போராடிய மொழிப்போர் தியாகிகள்தான் காரணம்’ என்று அப்போது அவர்கள் சொன்னார்கள். தங்கள் மாநிலங்களிலும் மொழிப் போராட்டத்துக்காக சிலர் உயிர் நீத்ததையும் சொன்னார்கள். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்றிருக்கிற அரசியல் அமைப்புச் சட்டமானது விரைவில் மாற்றப்படப் போகிறது. அது யாரால் மாற்றப்படப் போகிறது, யாருக்குச் சாதகமாக மாற்றப்படப் போகிறது என்பதுதான் அடுத்த சில ஆண்டுகளில் நடக்கப்போகிற மிகப் பெரிய போராட்டத்துக்குக் களமாக இருக்கும். இந்தப் போராட்டத்தில் தமிழர்கள், கன்னடர்கள், மலையாளிகள், வங்காளிகள், பஞ்சாபிகள், மராத்தியர்கள், குஜராத்தியர்கள், போஜ்புரிக்காரர்கள், அசாமிகள், மணிப்பூரியர்கள், காஷ்மீரிகள் என அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.’’

அரிபரந்தாமன் - உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி

‘‘ ‘ஒரே நாடு... ஒரே தேர்தல்’ மட்டுமல்ல, ‘ஒரே நாடு... ஒரே மொழி’ என்ற ஒற்றைக் கொள்கையை நோக்கி மத்திய அரசு தீவிரமாகப் போய்க்கொண்டிருக்கிறது. நோயின் மூலத்தைக் கண்டுபிடித்தால் தான் அதற்கு மருந்து தர முடியும். மத்திய அரசு இந்தியைத் திணிப்பதற்கு மூல காரணம், நமது அரசியலமைப்புச் சட்டம் பகுதி 17-ல் உள்ள 343-வது பிரிவுதான். ‘இந்தி மொழியே மத்திய அரசின் ஆட்சி மொழி’ என்று அந்தப் பிரிவு மிகத் தெளிவாகக் கூறுகிறது. அதனால்தான் நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசச் சொல்கிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகள் இருந்தாலும் ‘எனக்கு இந்தி, ஆங்கிலம் பேசத் தெரியாது’ என்று சபாநாயகரிடம் எழுத்துபூர்வமாக முன் அனுமதி பெற்றுத்தான் அவரவர் தாய்மொழியில் பேசும் நிலை இப்போதும் உள்ளது. அதே நேரம், ‘சட்டமன்றங்களில் அந்தந்த மாநில மொழியுடன், இந்தியிலும் அவை நடவடிக்கைகள் இருக்கலாம்’ என்கிறது அந்தச் சட்டப் பிரிவு. ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற அரசியல் சட்டத்துக்கு முரணாக, இந்திக்கு அதிக சலுகை தருவதாக இருக்கிறது இந்தச் சட்டப்பிரிவு. அரசியல் சட்டத்திலுள்ள இந்தப் பகுதியை நீக்காமல், சட்டத்தைத் திருத்தாமல் மாநில மொழிகளை நாம் காப்பாற்ற முடியாது. அரசியல் சட்டத்தைத் திருத்த மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தும் ஓரணியில் திரண்டால்தான் இது சாத்தியமாகும். எனவே, இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையுடன், தீவிரமாகப் போராட வேண்டும்.’’