Published:Updated:

ஜூ.வி பைட்ஸ்: பாதையை `மாற்றும்' ராமதாஸ், போஸ்டர் யுத்தம், பேரிளம் பெண் வலையில் `காக்கி'!

ஜூ.வி பைட்ஸ்
ஜூ.வி பைட்ஸ்

தேர்தல் நெருங்கிவிட்டது... மோதவில்லை என்றால்தானே ஆச்சர்யம். சமீபத்தில், 'ஆளும்கட்சி சொன்னதைச் செய்யவில்லை' என்று காட்டமாக விமர்சித்திருந்த பா.ம.க

"அ.தி.மு.க-வுடன் கூட்டணிக் கட்சிகள் மோத ஆரம்பித்துவிட்டன போலிருக்கிறதே?" என்று கழுகாரிடம் கேட்டோம்.

"தேர்தல் நெருங்கிவிட்டது... மோதவில்லை என்றால்தானே ஆச்சர்யம். சமீபத்தில், 'ஆளும்கட்சி சொன்னதைச் செய்யவில்லை' என்று காட்டமாக விமர்சித்திருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், சென்னையில் குப்பை எரியூட்டு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். 'அ.தி.மு.க மீண்டும் அதிகாரத்தைப் பிடிப்பது கடினம். இதனால், மருத்துவர் பாதையை மாற்றத் தயாராகிவிட்டார்' என்கிறது தைலாபுரம் வட்டாரம்."

"தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்கூட ஏதோ கூறியிருக்கிறாரே,,?"

"மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், 'நாங்கள் நினைத்தால் மூன்றாவது அணி அமைப்போம். எங்களுக்கு தனித்துப் போட்டியிட எந்த பயமும் இல்லை. அரசியலில் எதிரிகளும் இல்லை, நண்பர்களும் இல்லை' என்று 'சிரிக்காமல்' சொன்னதைக் கேட்டு, அங்கிருந்த நிருபர்களே... 'தம்பி... உங்க கட்சியோட நிலைமை தெரிஞ்சுதான் பேசுறீங்களா!" என்று 'ஜெர்க்' ஆகிப்போனார்களாம்" என்ற கழுகாரிடம், தி.மு.க தலைவர் ஸ்டாலினைக் கிண்டலடித்து கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களைக் காட்டினோம்.

ஜூ.வி பைட்ஸ்: பாதையை `மாற்றும்' ராமதாஸ், போஸ்டர் யுத்தம், பேரிளம் பெண் வலையில் `காக்கி'!

"எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியவுடன், ஸ்டாலினைக் கிண்டலடிக்கும் வகையில் சமீபத்தில் அ.தி.மு.க ஐ.டி டீமைச் சேர்ந்தவர்கள், 'உழைப்பை நம்பலாமா, பிறப்பை நம்பலாமா?' என்று ஸ்டாலினை இம்சை அரசன் புலிகேசி தோற்றத்தில் சித்திரித்து, கோவை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருக்கிறார்கள். இது ஸ்டாலினின் சமூகம் சார்ந்தவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் போஸ்டர் யுத்தம் பெரிதாகலாம்."

- நடிகர் விஜய் நகர்வுகள், தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க முகாம்களின் நிலவர அப்டேட்களை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2J5fxPc > மிஸ்டர் கழுகு: எடப்பாடி மெகா 'ட்ரீட்'! - திக்குமுக்காடிய எம்.எல்.ஏ-க்கள்... https://bit.ly/2J5fxPc

பேரிளம் பெண் வலையில் சென்னை காக்கி!

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' ரீத்து வர்மாவையும் நிரஞ்சனாவையும் மறக்க முடியுமா? கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் சென்னையில் பெரும் தொழிலதிபர்களுடன் நெருக்கமாகப் பழகி, அதை ஆடியோ வீடியோவாக்கி, பணம் பறிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் அந்த 40 வயது பேரிளம் பெண். கைவசம் பளபளவென்று ஸ்லிம்மாக ஏழெட்டு 'ஆண்ட்ராய்டு' போன்களை வைத்திருக்கும் இவரைக் கண்டாலே, சபலபுத்தித் தொழிலதிபர்கள் சிலர் சரண்டராகிவிடுகிறார்களாம். இவரிடம் கோடிகளில் பணத்தையும் சொத்தையும் இழந்த சிலர் காவல்துறையில் புகாரளித்திருக்கிறார்கள்.

ஜூ.வி பைட்ஸ்: பாதையை `மாற்றும்' ராமதாஸ், போஸ்டர் யுத்தம், பேரிளம் பெண் வலையில் `காக்கி'!

புகாரைப் பற்றி விசாரித்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர், விஷயம் தெரிந்ததுமே குபீரென்று வியர்த்துப்போனார்களாம். ஏனெனில், அந்தப் பெண் ஏற்கெனவே அந்த ஐ.பி.எஸ் அதிகாரிகளையும் தன் வலையில் வீழ்த்தியிருந்தாராம். வடக்கு மண்டலத்தில் ஐ.பி.எஸ் ஒருவரும், 'குற்றத்தை மையமாக' வைத்து விசாரிக்கும் அதிகாரி ஒருவரும் இவரிடம் வீழ்ந்திருக்கிறார்கள். வீழ்த்தப்பட்ட காக்கிகளின் வழித்தடத்தைத் தேடிச் சென்றால், மேலிடம் வரை `ஜொள்'ளுவது தெரிந்து ஆடிப்போனார்களாம் அதிகாரிகள்.

சமீபத்தில் இவரிடம் சிக்கி 10 லட்சம் ரூபாயை இழந்த சென்னைத் தொழிலதிபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றிருக்கிறார். அப்போது பெண்மணியின் செல்வாக்கு குறித்து காவல் நிலையத்தில் உள்ளவர்கள் தொழிலதிபரிடம் கூற... அரண்டுபோனவர், 'புகாரே வேண்டாம்' என செல்போன் நம்பரை மாற்றிவிட்டு, வீட்டையும் காலி செய்துவிட்டுப் போய்விட்டாராம். இதற்கிடையே, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருக்கும் கடவுள் பெயரைக்கொண்ட ஓர் அதிகாரியின் கார் அந்தப் பெண்மணியின் வீட்டுப் பக்கம் அடிக்கடி செல்வதை உளவுத்துறை கவனித்து ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம். சீக்கிரமே அவரையும் அந்தப் பெண் வியர்க்கவைக்கலாம் என்கிறார்கள்!

> ''பைக்கை மாத்துங்க... இல்லை, எங்களை மாத்திடுங்க!''

> நடுக்கடல் டீலிங்... நடுக்கத்தில் வி.ஐ.பி

> காசு, பணம், மணி, துட்டு... பஞ்சாயத்து டி.எஸ்.பி!

> ''மழைக்கு ஒதுங்கினாங்க... மரத்தை வெட்டிட்டாங்க!''

- இந்தத் தகவல்களுடன் கூடிய 'இன்ஃபார்மர்' பரத் அப்டேட்களை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க https://bit.ly/31Kn8t9 > ஜூனியர் வாக்கி டாக்கி https://bit.ly/31Kn8t9

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு