Published:Updated:

ஜூ.வி பைட்ஸ்: வியூக வல்லுநர்களின் `ஸ்கிரிப்ட்', ராஜேஷ் தாஸ்... காவல்துறையின் ஹாட் டாபிக்!

முதல்வர் பழனிசாமிக்காக வியூகம் வகுக்கும் சுனில், 'யார் முதல்வர் வேட்பாளர்?' என்ற வெடியைக் கிள்ளி அ.தி.மு.க-வுக்குள் எறிந்திருக்கிறார். அது நாலா பக்கமும் வெடித்து, உறங்கிக்கொண்டிருந்த பன்னீரை உசுப்பிவிட்டு முன்வரிசையில் உட்காரவைத்துவிட்டது.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் 13 ஆண்டுகள் வனவாசம் இருந்தபோது, தி.மு.க-வை கட்டிக்காத்த கருணாநிதிக்கும், 1996 சட்டமன்றத் தேர்தலில் தவிடுபொடியான பிறகு மீண்டு எழுந்த ஜெயலலிதாவுக்கும் வியூக வகுப்பாளர்கள் தேவைப்படவில்லை. ஆனால், 'இன்றுள்ள 'மில்லெனியம்' இளைஞர்களைக் கவர நாங்கள் அவசியம்' என்பது வியூக வல்லுநர்களின் வாதம்.

முதல்வர் பழனிசாமிக்காக வியூகம் வகுக்கும் சுனில், 'யார் முதல்வர் வேட்பாளர்?' என்ற வெடியைக் கிள்ளி அ.தி.மு.க-வுக்குள் எறிந்திருக்கிறார். அது நாலா பக்கமும் வெடித்து, உறங்கிக்கொண்டிருந்த பன்னீரை உசுப்பிவிட்டு முன்வரிசையில் உட்காரவைத்துவிட்டது.

தேர்தல் வியூகம்
தேர்தல் வியூகம்

'ஒருங்கிணைவோம் வா, எல்லோரும் நம்முடன்' என பிரசாந்த் கிஷோர் டீம் உருவாக்கிய திட்டங்கள் தி.மு.க-வுக்குள்ளேயே அதிருப்தி அலைகளைப் பரவவிட்டிருக்கிறது. கோடிகளைக் கொட்டிக் கொடுத்தும் வெற்றிக்கனி எட்டாக்கனியாகிவிடுமோ என்ற கலக்கம் அரசியல் கட்சிகளிடம் ஏற்பட்டிருக்கிறது.

பச்சைத்துண்டுடன் வயல்வெளியில் ஸ்டாலின் 'போட்டோஷூட்' நடத்துவதாகட்டும், 'முதல்வர் வேட்பாளர்' பஞ்சாயத்தை எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்து வதாகட்டும்... இந்த அரசியல் நாடகங்களுக்கான ஸ்கிரிப்டுகள் அனைத்தையும் வகுப்பது தேர்தல் வியூக வல்லுநர்களே.

2014-க்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில், கட்சிகளின் சித்தாத்தங்களைவிட கார்ப்பரேட் வியூக வகுப்பாளர்களின் 'சித்து' வேலைகளே முன்னிலைவகிக்கின்றன. 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலும் இதற்கு விதிவிலக்கல்ல. யார் இந்த வியூக வகுப்பாளர்கள், தேர்தல்களில் இவர்களின் பங்களிப்பு என்ன?

- முழுமையான கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > விடியலைத் தருமா வியூகங்கள்?- காத்திருக்கும் கட்சிகள்... க்ளிக் செய்க... https://bit.ly/34wRU9x

ராஜேஷ் தாஸ்... காவல்துறையின் ஹாட் டாபிக்!

"அணியிலேயே இடம்பெறாதவர், கடைசி நேரத்தில் கேப்டனாகக் களமிறங்கினால் அந்த அணியினரின் மனநிலை எப்படியிருக்கும்... அப்படியொரு நிலைதான் தமிழக சட்டம்-ஒழுங்கு காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கிறது." - தமிழக காவல்துறையின் இன்றைய ஹாட் டாபிக் இதுதான். காரணம், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டிருக்கும் ராஜேஷ் தாஸ்!

தமிழக காவல் துறையில் டி.ஜி.பி சட்டம்-ஒழுங்கு பதவிக்கு அடுத்து, கூடுதல் டி.ஜி.பி சட்டம்-ஒழுங்கு பதவிக்குக் கடும் போட்டி நிலவுகிறது. அதிகாரம்மிக்க பதவி அது. ஓராண்டாக அந்தப் பதவியிலிருந்த ஜெயந்த் முரளி, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாறுதல் செய்யப்பட்ட பிறகு, மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்த ராஜேஷ் தாஸ், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷின் கணவர் என்பது கூடுதல் தகவல்.

ஜூ.வி பைட்ஸ்: வியூக வல்லுநர்களின் `ஸ்கிரிப்ட்', ராஜேஷ் தாஸ்... காவல்துறையின் ஹாட் டாபிக்!

"கடந்த காலங்களில் நிறைய சர்ச்சைகளில் சிக்கியவர் ராஜேஷ் தாஸ். 'தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சரியில்லை' என்று எதிர்க்கட்சிகள் பிரச்னை கிளப்பிவரும் நிலையில், அந்தப் பதவிக்கு சர்ச்சைக்குரிய ஒருவரை நியமிக்கலாமா?" என்று காவல்துறைக்குள்ளேயே முணுமுணுப்பு எழுந்திருக்கிறது. இது குறித்தும் மூத்த காவல்துறை அதிகாரிகள் சிலர் நம்மிடம் பேசினார்கள்.

- முழுமையான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2SyQ5Dl > சர்ச்சை நாயகனுக்கு சவால் பதவி! https://bit.ly/2SyQ5Dl

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு