பிரீமியம் ஸ்டோரி
வலை ஆட்டம்

'கேம்ஸ் இல்லாத செல்போன், ஸ்வீட் இல்லாத விருந்து மாதிரி’ எனப் புதுமொழி சொல்லும் அளவுக்கு, எல்லோரின் போனிலும் அதிரடி விளையாட்டுகள் இடம்பிடிச்சிருக்கு. பரவலாகத் தெரிந்த ஆங்ரிபேர்டு, டெம்பிள் ரன், கேண்ட்டி கிரஷ் தவிர, சுவாரஸ்யமான விளையாட்டுகள் ஸ்மார்ட் போன்களில் வலம்வருகின்றன. பலர் சேர்ந்து விளையாடும் மல்ட்டி பிளேயர் கேம்ஸ் முதல் தனி நபர் கேம்ஸ் வரை உங்களுக்காக...

- சைபர்சிம்மன்

ரெயில் ரஷ் (Rail Rush) :

வலை ஆட்டம்

வேக விரும்பிகளுக்கான சவால் விளையாட்டு. நமக்கான பெட்டியில்  ஏறிக்கொண்டு, தடைகளைத் தாண்டி தண்டவாளத்தில் முன்னேற வேண்டும். குகைப் பயணம், நீர்வீழ்ச்சி, சிலந்திவலை, காளான் அரங்கு என திகிலூட்டும் பயணத்தின் இறுதியில், தங்கக் காசுகளை அள்ளலாம். பிரபல கேம்ஸ் தயாரிப்பு நிறுவனமான, மினிகிளிப் உருவாக்கியது. 4.1 ரேட்டிங் பெற்றது.

ஆண்ட்ராய்டில் ஆட, play.google.com/store/apps/details?id=com.miniclip.railrush&feature.ஐஓஎஸ்சிலும் உண்டு.

மணல்கோட்டை! (Sandcastle)

வலை ஆட்டம்

ஆங்ரிபேர்டு பாணியில் ஒரு ஆன்லைன் விளையாட்டு. எதிரிகளிடம் இருந்து கோட்டையைக் காக்க வேண்டும். எதிரிக் கப்பலில் இருந்து குண்டுகள் வீசப்படும். அவர்கள் நம் கோட்டையை அழிப்பதற்குள், அவர்களின் கப்பல்களை அழிக்க வேண்டும். இணைய முகவரி: http://armorgames.com/play/5137/sandcastle.

பிட்ஃபால் (Pitfall)

வலை ஆட்டம்

பிரபல கேம் தயாரிப்பு நிறுவனமான ஆக்டிவிஷன், 1982ல் அறிமுகம் செய்த ஆன்லைன் விளையாட்டு. ஆண்ட்ராய்டுக்காக மறு வடிவம் எடுத்துள்ளது. குறுகிய பாதைகள், கொட்டும் நீர்வீழ்ச்சி, முதலைகள், பாம்புகளைச் சமாளித்து, எரிமலைக்குழம்பு தடைகளைத் தாண்டிக் குதிக்க வேண்டும். காட்டுப் பகுதி தவிர மாற்றுப் பாதைகளும் உண்டு. ரேட்டிங் 4.0. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இரண்டிலும் ஆடலாம். http://www.activision.com.

ரன் இன் கிரவுடு (Run In Crowd)

வலை ஆட்டம்

ஃப்ளாப்பி பேர்டு போன்ற கலக்கல் விளையாட்டு. ஃப்ளாப்பி பறவை போலவே இதிலும் ஓரத்துக்குச் சென்றுவிடும் பறவையை அழைத்து வர வேண்டும். ஃப்ளாப்பி பேர்டுபோல ரொம்பவும் வெறுப்பேற்றாது. ஆகையால், ஆடும்போது சுவராஸ்யமாக இருக்கும். மற்றவர்களோடு போட்டி போடலாம். பல லெவல்கள் இருக்கின்றன. இது, முதலில் பிளாக்பெர்ரிக்காக அறிமுகமானது. 16 நாடுகளில் முதல் 25 இடத்தைப் பெற்றுள்ளது.  

ஆண்ட்ராய்டில் ஆட, https://play.google.com/store/apps/details?id=com.ursinepaw.runincrowd.

சின்ன மீன் (Small Fry)

வலை ஆட்டம்

சின்ன மீனை பெரிய மீன் துரத்த அதன் வாயில் சிக்காமல் தப்பிக்கும் சுவாரஸ்யமான விளையாட்டு. ஏழு கடல் தாண்டிச் செல்ல வேண்டும். நீருக்குள் மற்ற மீன் இனங்களைப் பார்க்கலாம். ஒற்றை டச்சில் கட்டுப்படுத்தி ஆடலாம். டச் செய்தால், மீன் குதிக்கும். விடுவித்தால், நீந்தும். தண்ணீரிலிருந்து ஆகாயத்துக்குத் தாவலாம். ஆண்ட்ராய்டில் ஆட,  https://play.google.com/store/apps/details?id=com.noodlecake.smallfry

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு