Published:Updated:

திறமைக்கு சல்யூட்!

என்.மல்லிகார்ஜுனா

பிரீமியம் ஸ்டோரி

பாம்பா... தேளா... புலியா... கரடியா... எதுவாக இருந்தாலும் 9 வயது கார்லோஸ் கண்ணில் பட்டால், தப்ப முடியாது. அவனது கேமராவில் சிறைப்படும், பயங்கர உயிரினமும் அழகாகி, மனதைக்  கொள்ளை கொள்ளும். லைக்ஸ் அள்ளும்.

திறமைக்கு சல்யூட்!

ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் பெரேஸ் நேவல் (Carlos Perez Naval), 5 வயதிலேயே  கேமராவைக் கையில் பிடித்தவன். வனவிலங்குகளைப் புகைப்படம் எடுப்பது, அவனுக்கு சாக்லேட் சாப்பிடுவது மாதிரி. பெற்றோருடன் வனச் சுற்றுலா செல்லும்போது, கேமராவையும் எடுத்துச் செல்வான். சிங்கமே நடந்து சென்றாலும் தில்லாகப் படம் பிடிப்பான்.

திறமைக்கு சல்யூட்!

லண்டனில் உள்ள நேஷனல் ஹிஸ்டரி மியூஸியம், 1964-ல் இருந்து புகைப்பட கலைஞர்களுக்கு வெவ்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்திப் பரிசு வழங்கிவருகிறது. அதில், கார்லோஸ் எடுத்த தேள்  புகைப்படம், 2014-ம் ஆண்டுக்கான 'Young Wildlife Photographer’’ என்ற விருதைப் பெற்றுத் தந்திருக்கிறது. அந்தத் தேள், கொடுக்கை உயர்த்தி்க் காட்டுவது கூட, கார்லோஸ் திறமைக்கு சல்யூட் வைப்பது போலவே இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு