Published:Updated:

ஆஹா அறிவியல்!

வியக்க வைக்கும் அறிவியல் உண்மைகள்!குச்சியால் அரிசிகளைத் தூக்கலாம்!

பிரீமியம் ஸ்டோரி

தேவை: பிளாஸ்டிக் பாட்டில், நீளமான பென்சில் அல்லது குச்சி, அரிசி  தேவைப்படும் அளவுக்கு.

ஆஹா அறிவியல்!

செய்முறை: மேஜையின் மீது சிறிதளவு அரிசியைப் பரப்பி, குச்சியை அதன் மீது வைத்து தூக்கிப் பாருங்கள். ஒரு அரிசிகூட குச்சியோடு வராது. ஒரு கைப்பிடி அரிசியை மேஜையின் மீது வைத்து, குச்சியைச் செருகித் தூக்கினாலும் அரிசி வராது. பிறகு, அரிசியை ஒரு பிளாஸ்டிக் பாட்டில் முழுவதும் நிரப்புங்கள். பாட்டிலின் வாய்  வழியாக,   படத்தில் காட்டியபடி குச்சியைச் செங்குத்தாகச் செருகவும். இப்போது, குச்சியின் மேல்முனையைப் பிடித்துத் தூக்குங்கள்.

ஆஹா அறிவியல்!

என்ன ஆச்சரியம்! பாட்டிலும் அரிசியும் குச்சியோடு சேர்ந்து மேலே வரும். காரணம் என்ன?

அரிசிகளுக்கு உள்ளே குச்சியைச் செருகித் தூக்கும்போது, குச்சிக்கும் அதோடு ஒட்டிக் கொண்டிருக்கும் அரிசிகளுக்கும் இடையே ஏற்படும் உராய்வு விசை, குச்சியை நகரவிடாமல் தடுக்கிறது. இதனால், அரிசி நிறைந்த பாட்டில், குச்சியோடு சேர்ந்து மேலே வருகிறது.

ஒரு பொருள் மற்றொரு பொருள் மீது இயங்கும்போது, பொருள் இயங்கும் திசைக்கு எதிராக ஒரு தடைவிசை செயல்படுகின்றது. இதுவே, உராய்வு விசை எனப்படும்.

பயன்பாடு: நாம் தரை மீது நடப்பதற்கும் ஓடுவதற்கும் உராய்வு விசை தேவை. பனிப் பிரதேசங்களில் பனித் தரையின் மீது நடப்பது  எளிதல்ல. பனித்தரையில் உள்ள நீர்ப்படலம், தரைக்கும் காலுக்கும் உள்ள உராய்வு விசையைக் குறைக்கும். அதனால், கால் வழுக்கிக் கீழே விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.

பேராசிரியர் அ.சுப்பையா பாண்டியன்

படங்கள்: ஆ.முத்துக்குமார்

மாடல்: ஜெகத்வாசன், காமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு