Published:Updated:

அடடே... அறிவியல் கண்காட்சிகள்!

அடடே... அறிவியல் கண்காட்சிகள்!

பிரீமியம் ஸ்டோரி

இயல்பான அறிவியல் கண்காட்சி!

அறிவியல் வளர்ச்சி என்பது, அன்றாட வாழ்வில் மனிதனுக்கு இயல்பாகப் பயன் தரும் கண்டுபிடிப்புகளாக இருக்க வேண்டும் என்ற  அடிப்படையில் சென்னை, திருவேற்காடு S.A.பொறியியல் கல்லூரியில் நடந்தது அற்புதமான அறிவியல் கண்காட்சி.

அடடே... அறிவியல் கண்காட்சிகள்!

100 பள்ளிகளின் 400-க்கும் மேற்பட்ட புராஜெக்ட்டுகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. மின்வெட்டு, கழிவுப்பொருள் சுழற்சி எனப் பல்வேறு பிரச்னைகளுக்குத் தங்களின் தீர்வை முன்வைத்திருந்தார்கள் சுட்டி விஞ்ஞானிகள். இந்த அறிவியல் மாநாட்டில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அர்ஜுன் MBT மார்க்-1 என்னும் பீரங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

'60 டன் எடையுடைய இது, மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். போர் நடக்கும் இடத்தை அடைய, ஏரி போன்ற நீர் நிலைகள் இடையே வந்தால், நீர்மூழ்கிக் கப்பல்  போலவும் இயங்கும். இது, தமிழகத்தில் தயார்செய்யப்பட்டது'' என்று ஒரு மாணவர் விளக்கிக் கொண்டிருந்தார்.

அடடே... அறிவியல் கண்காட்சிகள்!

''வருங்காலத்தில் நம் நாட்டின் பெருமையை உயர்த்தும் வகையில் நாங்களும் இது மாதிரியான கண்டுபிடிப்புகளை உருவாக்குவோம்'' எனச் சொல்லி, சுட்டி விஞ்ஞானிகள் பலர் அந்தப் பீரங்கிக்கு சல்யூட் வைத்தார்கள்.

ச.சந்திரமௌலி,படம்: ரா.வருண் பிரசாத்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு!

1,200 பள்ளி மாணவர்களின் படையெடுப்புடன் அதிர்ந்தது, புதுக்கோட்டையில் உள்ள மவுன்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தேசிய அறிவியல் தொழில்நுட்ப பறிமாற்றக் குழுவும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய 22-வது தேசிய அறிவியல் மாநாட்டில், அறிவியலின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். 'காலநிலை மற்றும் தட்பவெப்ப நிலையைப் புரிந்துகொள்ளுதல்’ எனும் தலைப்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த மாணவர்கள் பங்கேற்று தங்கள் ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர்.

அடடே... அறிவியல் கண்காட்சிகள்!

2,500-க்கும் மேற்பட்ட ஆய்வுகளில் இருந்து 250 ஆய்வுகள் தேர்வுசெய்யப்பட்டு, மாநாட்டில் வாசிக்கப்பட்டன. இதிலிருந்து 30  தமிழக ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவை, அடுத்த கட்டமாக அனைத்து மாநிலங்களில் இருந்து தேர்வாகும் ஆய்வுகளுடன் போட்டியிடும். வெற்றிபெறும் ஆய்வுகளுக்கு தேசிய அளவில் விருதுகள் காத்திருக்கின்றன.

மாநாட்டுப் பணிகளை பரபரப்பாகச் செய்து கொண்டிருந்த  ஒரு மாணவர் குழு, 'இந்த மாதிரி அறிவியல் மாநாடு எங்களின் புதிய முயற்சிக்கு தூண்டுதலாக இருக்கு. அரசுப் பள்ளி மாணவர்கள், மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் எனப் பாகுபாடு இல்லாமல், ஒரே இடத்தில் சேர்ந்து ஒவ்வொருவரின் அனுபவங்களையும் பகிர்ந்துக்கிட்டது சந்தோஷமா இருக்கு'' என்று உற்சாகத்துடன் சொன்னார்கள்.

ர.நந்தகுமார்  படங்கள்: தே.தீட்ஷித்

இளம் விஞ்ஞானிகளோடு இனிய சந்திப்பு!                                                    

'நிலையான உலகிற்கான அறிவியல் மற்றும் கணிதம்’ என்ற தலைப்பில் சென்னை, அம்பத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பள்ளியில் மூன்று நாட்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் நமது கலாசாரத்தை வெளிப்படுத்தும் பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தியது வித்தியாசமாக இருந்தது. மாதிரி கோளரங்கக் காட்சி, இஸ்ரோ விண்வெளி, மாதிரி டைனோசர் உலகம் எனப் பல்வேறு அரங்குகள் அசத்தின.

அடடே... அறிவியல் கண்காட்சிகள்!

மனிதர்கள் இல்லாமல் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் கருவி, ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைக்களைக் காப்பாற்றுவதற்கான கருவி என, இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு மாதிரிகள் ஒவ்வொன்றிலும் சமூக அக்கறை ஒளிர்ந்தது.

''இந்தக் கண்காட்சியில் ஐந்து பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 கண்டுபிடிப்புகளை, டெல்லியில் நடைபெறும் தேசிய அறிவியல் கண்காட்சிக்கு அனுப்புவார்கள். அங்கேயும் பரிசு வாங்குவோம்' எனக் குஷியோடு சொன்னார்கள் இளம் விஞ்ஞானிகள்.

க.தனலட்சுமி   படங்கள்: ச.ஹர்ஷினி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு