Published:Updated:

600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு!

600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு!
600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு!
600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு!

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை நான்கரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அகலகோட்டை ஊராட்சிக்குட்பட்டது மந்தையூïர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (30). இவரது மனைவி பத்மா (26). இவர்களுக்கு பூஜா (31/2) என்ற பெண் குழந்தையும், குணா என்ற இரண்டரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் 600 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

அதில் தண்ணீர் எதுவும் வரவில்லை. இரவு நீண்ட நேரமாக இந்த வேளை நடந்ததால் குழியை மூடாமல் சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை ஆனந்தன் தனது நிலத்தில் விவசாய பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி பத்மா, தனது இரண்டரை வயது மகன் குணாவுடன் தனது நிலத்திற்கு அருகில் உள்ள தொட்டியில் துணி துவைப்பதற்காக வந்தார்.

அங்கு குணாவை கீழே இறக்கி விட்டு பத்மா துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை குணா எதிர்பாராதவிதமாக, அந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 20 அடி தூரத்தில் பாறைகளுக்கு இடையே குழந்தை குணா சிக்கிக்கொண்டான்.

இந்த நிலையில் குழந்தை குணா குழிக்குள் விழுந்ததும் கதறி அழுதான். குழந்தையின் சத்தம் ஆழ்துளை குழிக்குள் இருந்து கேட்டதை கண்டு பத்மா கதறி கூக்குரல் எழுப்பினார். இதுகுறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை போலீசாரும்,தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.

முதல் கட்டமாக 2 ஜே.சி.பி எந்திரங்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, சிறுவன் குணா விழுந்த ஆழ்துளை கிணறு அருகில் 2 குழிகள் வெட்டப்பட்டன. இவ்வாறு 20 அடி ஆழத்திற்கு இரண்டு புறமும் குழிகள் வெட்டப்பட்டது. அதன் பிறகு சிறுவன் விழுந்த இடத்தின் அருகில் மண் சுவற்றில் துளையிடப்பட்டது.

சுமார் 4 அடி அளவில் துளையிடப்பட்டதும் குழந்தை குணா இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த குழந்தை கயிறு மற்றும் கொக்கி உதவியுடன், மீட்கப்பட்டான். இந்த மீட்பு காலை 10.30 மணி முதல் மாலை 3.15 மணி வரை நடந்தது.

இதில் தீயணைப்பு வீரர்களின் மிக கடுமையான முயற்சியால் குழந்தை குணா, உயிருடன் மீட்கப்பட்டான். தனது குழந்தை குணா உயிருடன் கிடைத்ததை கண்டு தாய் பத்மா, தந்தை ஆனந்தன் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

##~~##
இதற்கிடையே அங்கு 108 ஆம்புலன்ஸ் தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு தயாராக இருந்த அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ராஜ்குமார், உடனடியாக குழந்தை குணாவிற்கு குளுக்கோஸ் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளித்தார். இதன் பிறகு குழந்தை குணா ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டான்.
அங்கு குழந்தை குணாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் மகேஸ்வரன், மருத்துவமனைக்கு வந்து குழந்தை குணாவை நேரில் பார்த்தார். மேலும் அவனுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கவும் டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. ஒருசில சம்பவங்களில் மட்டும் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயங்களும் நிகழ்ந்துள்ளன.