Published:Updated:

கன மழை: பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

கன மழை:  பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!
கன மழை: பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!
கன மழை:  பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை: சென்னைக்கு தென்கிழக்கே 500 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயல் சின்னமாக மாறும் என்றும், இதனால் கன மழை பெய்யும் என்பதாலும்,சென்னையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து  நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில்  கடந்த 3 தினங்களாக மழை ஓய்ந்து வெயில் அடித்தது. நகரின் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து சென்றதால் நாகப்பட்டினம்,திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையானது, நேற்று அதிகாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

##~~##
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன்,"தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று அதிகாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது முதலில் மேற்கு நோக்கியும்,பின்னர் வடமேற்காகவும் நகரும்.தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை நாகப்பட்டினத்திற்கும்,ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் 48 மணி நேரம் இருப்பதால் காற்றழுத்த தாழ்வு மண்டலம்,இன்று காலை புயல் சின்னமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

காற்று பலமாக வீசும்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும்.கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களை பொறுத்தவரையில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும்.
கடலோர மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வரை வேகமாக வீசக்கூடும்.சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.மிதமான மழையோ கன மழையோ பெய்யக்கூடும்" என்றார்.
புயல் எச்சரிக்கை கூண்டு
இதனிடையே கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், ராமேசுவரம், தூத்துக்குடி, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் கன மழை எச்சரிக்கை காரணமாக சென்னை,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள  பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.