Published:Updated:

கன மழை: தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கன மழை: தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
கன மழை: தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
கன மழை: தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

தூத்துக்குடி: கன மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தூத்துக்குடி,  நெல்லை மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.தூத்துக்குடி  மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், உடன்குடி,  காயல்பட்டினம், ஆத்தூர், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம் உள்ளிட்ட  பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

தூத்துக்குடியில் பெய்து வரும் மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.  உப்பளங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  பலத்த மழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது.

##~~##
மழை காரணமாக தூத்துக்குடி துறைமுக பகுதியில் இருந்து கடலுக்கு செல்லும் 240  படகுகளில் 70 படகுகளில் மட்டும் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். மற்ற  படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
அதேப்போன்று நெல்லை மாவட்டத்தில் அம்பை, செங்கோட்டை, சிவகிரி பகுதியில்  கனமழை பெய்தது. சங்கரன்கோவில் பகுதியிலும் மிதமான மழை பெய்தது.
அணை பகுதியில் மணிமுத்தாறில் மட்டும் மிதமான மழை பெய்தது. மற்ற பகுதிகளில்  லேசான தூறல் இருந்தது.அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்யும்  பட்சத்தில் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.