Published:Updated:

வணக்கம் பாரதி!

வணக்கம் பாரதி!

முறுக்கு மீசை, தலைப்பாகை, கம்பீரமான பார்வையுடன் இருக்கும் மகாகவி பாரதியாரின் தோற்றம் மறக்க முடியுமா?

வணக்கம் பாரதி!

இந்திய சுதந்திரம், பெண் விடுதலை, பாப்பா பாட்டு எனப் பல்வேறு பாடல்கள் மூலம் இப்போதும் நம் மனங்களில் வாழும் பாரதியை நேரில் சந்தித்தால்?

பாரதியார் வாழ்ந்த   திருவல்லிக்கேணி இல்லத்திலேயே இந்தச் சந்திப்பு நடந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வணக்கம் பாரதி!

‘‘தாங்கள் ஏன் தாலாட்டுப் பாடல்கள் மட்டும் இயற்றவில்லை?

வணக்கம் பாரதி!

‘‘அது சுதந்திரப் போராட்ட காலம். என் மக்கள் எந்த நேரமும் வீர முழக்கத்துடன் விழித்து இருக்க வேண்டும், உறங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் தாலாட்டுப்  பாடலை இயற்றவில்லை.’’

‘‘தாங்கள் பிராமணராக இருந்தும் ஏன் முறுக்கு மீசை வைத்துள்ளீர்கள்?’’

வணக்கம் பாரதி!

‘‘இந்தச் சமூகத்தில் சாதி, மத வேறுபாடுகளே  இருக்கக் கூடாது என்பதற்காக, முறுக்கு மீசை வைத்துள்ளேன்.’’

‘‘விடுதலைப்போராட்டப் பாடல்கள் எழுதிய தாங்கள், 'பாஞ்சாலி சபதம்’ எழுதக் காரணம் என்ன?’’

வணக்கம் பாரதி!

‘‘இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்த எழுதினேன்.’’

‘‘தங்களின் குருவாக யாரைக் கருதுகிறீர்கள்?’’

வணக்கம் பாரதி!

‘‘சுவாமி விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதாவை எனது குருவாகக் கருதினேன்.’’

‘‘சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் பற்றி...’’

வணக்கம் பாரதி!

‘‘இது இயற்கையின் விதி அல்ல. மனிதர்களின் சதி. ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்’ என்றேன். விளைநிலங்களை அழித்து, நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை இனியாவது விட வேண்டும்.’’

‘‘இன்றைய மாணவர்களுக்கு தாங்கள் சொல்ல நினைப்பது என்ன?’’

வணக்கம் பாரதி!

‘‘நீங்கள் ஆங்கிலத்துக்கு காட்டும் அக்கறையை, தாய் மொழியான தமிழுக்கும் காட்டுங்கள். ஏனெனில், தாய் மொழியை அறியாதவன் கண்கள் இருந்தும் பார்வை இல்லாதவன் போலத்தான்.’’ 

- பெ.ரெ.லாவண்யா, கா.செ.கரிஷ்மா,ஹ.நா.ஹரிணி, க.சு.அனுஸ்ரீ .பாரதியாக: பிரதீப்தா