Published:Updated:

கனமழை: சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை: சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை: சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை: சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை: கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கி பலத்த மழை பெய்தது.

குறிப்பாக, சென்னையில் கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக, சாலையில் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்தது. அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், கனமழை நீடிக்கும் என்பதால் சென்னையில் செவ்வாய்க்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி அறிவித்தார்.

அதேப்போன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கே.வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை நீடிக்கும்

இதனிடையே, சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.