Election bannerElection banner
Published:Updated:

திருவள்ளூரில் குழந்தையைக் கடத்த முயன்ற வட இந்தியர்..! காவல்துறை விசாரணை

திருவள்ளூரில் இரண்டு வயதுக் குழந்தையைக் கடத்த முயற்சி செய்த வட இந்தியரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

திருவள்ளூரில் குழந்தையைக் கடத்த முயன்ற வட இந்தியர்..! காவல்துறை விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் மனவாளநகர் பகுதி காவேரி தெருவை சேர்ந்தவர் அனிதா. நேற்று மாலை அவர் வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய இரண்டு வயது பெண் குழந்தை அலரும் சத்தம் கேட்டது. அப்போது வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது வட நாட்டைச் சேர்ந்த வாலிபர் அவரது குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து அனிதா அலறி குழந்தை, குழந்தை என்று கத்தினார். அவரின் அலறல் சத்தத்தைக் கேட்ட அந்த வாலிபர் குழந்தையை இறக்கி விட்டு ஓடினார். அப்போது அந்தப் பகுதி மக்கள் அவரைப் பிடித்து மனவாளநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலிசார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு