Published:Updated:

கையெழுத்துப் போடாத கலெக்டர்: காசோலைக்காகக் கைக்குழந்தையுடன் பல மணிநேரம் காத்திருந்த பெண்கள் ஏமாற்றம்!

தேனி மாவட்டத்தில், கடந்த மாதம் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற 'தாலிக்குத் தங்கம்' வழங்கும் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. பயனாளிகள் அனைவருக்கும் சுமார் 4 மணி நேரம் நின்று காசோலைகளை வழங்கினார் பன்னீர்செல்வம். இந்நிலையில், அதற்கான பணம் இன்னும் வந்துசேரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில், இன்று காலை தாலிக்குத் தங்கம் திட்டத்தின் கீழ் பதிவுசெய்த சுமார் 800 பேர் கலெக்டர் அலுவலகம் வரவழைக்கப்பட்டு, காத்திருந்து திரும்பிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமூக நலத்துறை சார்பில், தாலிக்குத் தங்கம் திட்டத்தில் பதிவுசெய்த 800 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, இன்று காலை கலெக்டர் கையால் காசோலைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை நம்பி, அனைவரும் காலை 10 மணிக்கே தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, மதியம் 1 மணி வரை காத்திருந்தனர். பின்னர், ‘’கலெக்டர் இன்னமும் காசோலையில் கையெழுத்துப் போடவில்லை; நாங்கள் சொல்லி அனுப்புகிறோம். அப்போது வந்தால்போதும்’’ என்று சமூக நலத்துறை அதிகாரிகள் கூறிய பதிலால் பல பெண்கள் எரிச்சல் அடைந்தனர்.

அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள், உத்தமபாளையம் வட்டாரத்தில் இருந்து வந்த பெண்களை மட்டும் இருக்கச் சொல்லிவிட்டு, அவர்களுக்கு மட்டும் காசோலைகளை வழங்கினர். ``கலெக்டர் கையெழுத்துப் போட்டுவிட்டார் என்று முதலில் சொல்லி, பின்னர் போடவில்லை என்று சொல்வது மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக பெண்கள் புகார் கூறினர். `அதென்ன உத்தமபாளையம் வட்டாரத்திற்கு மட்டும் தனி அக்கறை என்றுதான் புரியவில்லை. இனியாவது இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வாரா கலெக்டர்` என்று கூட்டத்தில் இருந்த பெண்கள் சிலர் முனுமுனுத்ததையும் கேட்க முடிந்தது. இதுதொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் உமையாளைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவரது எண், தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாகப் பதில் கிடைத்தது.