Published:Updated:

செப்டிக் டேங்கில் விழுந்து மாணவி பலி: பள்ளி தாளாளர் கைது!

செப்டிக் டேங்கில் விழுந்து மாணவி பலி: பள்ளி தாளாளர் கைது!
செப்டிக் டேங்கில் விழுந்து மாணவி பலி: பள்ளி தாளாளர் கைது!

கிருஷ்ணகிரி: பள்ளி நிர்வாகங்களின் அலட்சியங்களை சுட்டிக்காட்ட மேலும் ஒரு பிஞ்சு  தன் உயிரை விட்டிருக்கும் சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள  பள்ளி ஒன்றில் அரங்கேறி உள்ளது.

செப்டிக் டேங்கில் விழுந்து மாணவி பலி: பள்ளி தாளாளர் கைது!

கடந்த ஆண்டு பஸ்ஸின் ஓட்டை வழியே ஸ்ருதி என்ற சிறுமி விழுந்து இறந்த  அதிர்ச்சியே இன்னும் முழுதாக விலகவில்லை. ஆனாலும், அலட்சியம் காரணமாக  பிஞ்சுகள் மரணிப்பது ஆங்காங்கே தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள சி.எம்.எஸ் என்ற தனியார்  பள்ளி செயல்படுகிறது.

இந்தப் பள்ளியில் பயிலும் எல்.கே.ஜி மாணவி மாலதி நேற்று காலை 11 மணி அளவில்  விடப்பட்ட இடைவேளைக்குப் பிறகு காணாமல் போயிருக்கிறார். இது ஆசிரியர்கள்  மூலம் தாமதமாக நிர்வாகத்தின் கவனத்துக்கு தெரிந்து அவர்கள் தேடியிருக்கிறார்கள்.

##~~##
பள்ளி நிர்வாகங்களின் அலட்சியங்களை சுட்டிக்காட்ட மேலும் ஒரு பிஞ்சு தன் உயிரை விட்டிருக்கும் சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள பள்ளி ஒன்றில் அரங்கேறி உள்ளது. பள்ளி வளாகத்தில் பாதுகாப்பின்றி திறந்து கிடந்த செப்டிக் டேங்கில் பிணமாக  கிடைத்திருக்கிறது அந்தப் பிஞ்சு.
தங்களை தற்காத்துக் கொள்ள, ‘மராமத்து பணிகள் மேற்கொள்ள சமீபத்தில் தான் செப்டிக்  டேங்கை திறந்தோம்’ என்று கூறுகிறது பள்ளி நிர்வாகம்.
அவர்களின் உச்சகட்ட அலட்சியத்தால் கூலித்தொழிலாளிகளான வெங்கடேசன்-பவித்ரா  தம்பதியினர் தங்கள் மகளை பறிகொடுத்து கதறிக்கொண்டு இருக்கிறார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக அப்பள்ளி தாளாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அலட்சியம் காரணமாக குழந்தைகள் இறப்பதை தடுக்க அரசு என்ன செய்யப் போகிறது?
-எஸ்.ராஜாசெல்லம்.

படம்: ராஜேஷ்