Published:Updated:

ஈழ விவகாரம்: கூடங்குளத்தில் குழந்தைகள் உண்ணாவிரதம் (படங்கள்)

ஈழ விவகாரம்: கூடங்குளத்தில் குழந்தைகள் உண்ணாவிரதம் (படங்கள்)
ஈழ விவகாரம்: கூடங்குளத்தில் குழந்தைகள் உண்ணாவிரதம் (படங்கள்)

நெல்லை: ஈழப் பிரச்னைக்காக கூடங்குளம் பகுதிகளை சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

இலங்கை தமிழர்கள் பிரச்னை தொடர்பாக மாணவர் போராட்டங்கள் மாநிலம் முழுவதும் நடந்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் இது வீரியம் அடைந்து வருகிறது. பல்வேறு அரசியல் சக்திகள் இந்த போராட்டங்களுடன் தங்களை இணைத்துக்கொண்டுள்ளன.
 

ஈழ விவகாரம்: கூடங்குளத்தில் குழந்தைகள் உண்ணாவிரதம் (படங்கள்)

இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் இடிந்தகரையிலும் ஈழப் போராட்டம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

##~~##
இன்று காலையில் இருந்து இடிந்தகரை, கூடங்குளம் பகுதிகளை சேர்ந்த பெண்களும், சிறு குழந்தைகளும் ஈழப் பிரச்னைக்காக சிறப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளும், பெண்களும் பங்கெடுத்துள்ள இந்த போராட்டத்தில் பலரும் உணர்ச்சிகரமாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளது.