Published:Updated:

அரசு மருத்துவமனையில் வீசப்பட்ட மன வளர்ச்சி குறைபாடுள்ள 6 மாதக் குழந்தை.!

எம்.கணேஷ்

அரசு மருத்துவமனையில் வீசப்பட்ட மன வளர்ச்சி குறைபாடுள்ள 6மாத ஆண் குழந்தை.!

அரசு மருத்துவமனையில் வீசப்பட்ட மன வளர்ச்சி குறைபாடுள்ள 6 மாதக் குழந்தை.!
அரசு மருத்துவமனையில் வீசப்பட்ட மன வளர்ச்சி குறைபாடுள்ள 6 மாதக் குழந்தை.!

தேனி கானாவிலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனவளர்ச்சி குறைபாடுள்ள 6 மாதக் குழந்தை வீசப்பட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவில் வீசபட்ட ஆண் குழந்தையை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் அனுமதித்தனர். அங்கே குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனை வளாகத்தில் குழந்தையை யார் வீசிச் சென்றது என மருத்துவமனைக் காவலர்கள் விசாரணை செய்தும் எந்த பலனும் இல்லை. குழந்தை வீசப்பட்ட சம்பவம் குறித்து மருத்துவமனை டீன் திருநாவுக்கரசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த டீன், அரசு மருத்துவமனையில் உள்ள தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் அந்த ஆண் குழந்தையை பதிவு செய்து குழந்தைக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார். தொடர் சிகிச்சைக்குப் பின்னர், அந்த குழந்தை மனவளர்ச்சி குறைபாடுள்ள குழந்தை என கண்டறியப்பட்டது. இந்த குறைபாடு காரணமாகவே, குழந்தையை பெற்றோர்கள் விட்டுச்சென்றிருக்க வேண்டும் என கூறிய மருத்துவமனை டீன் திருநாவுக்கரசு, குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை தொண்டு நிறுவனங்கள் செய்ய முன் வந்தால் அவர்களிடம் குழந்தையை ஒப்படைக்க தயாராக இருக்கிறோம். அதுவரை மருத்துவமனையின் பராமரிப்பில் குழந்தை இருக்கும், என்றார்.