Published:Updated:

திருஷ்டி கழிக்க 2 வயது குழந்தை நரபலி: சென்னையில் பயங்கரம்

திருஷ்டி கழிக்க 2 வயது குழந்தை நரபலி: சென்னையில் பயங்கரம்
திருஷ்டி கழிக்க 2 வயது குழந்தை நரபலி: சென்னையில் பயங்கரம்
திருஷ்டி கழிக்க 2 வயது குழந்தை நரபலி: சென்னையில் பயங்கரம்

சென்னை: வீட்டின் திருஷ்டியை கழிக்க 2 வயது ஆண் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி, பி.வி.காலனி, 27வது தெருவில் வசித்து வருபவர் செந்தில். கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவர்களது 2 வயது மகன் ஜெஷ்ணு. கடந்த 10ஆம் தேதி மதியம் வீட்டின் மாடியில் வாளியில் இருந்த தண்ணீருக்குள் ஜெஷ்ணு இறந்து கிடந்தான். இதனை பார்த்த பெற்றோர் தவறி விழுந்து இருக்கலாம் என்று கருதி உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்து பார்த்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். அதன்பிறகு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் குழந்தை இறந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

தலைப்பிள்ளை என்பதால் குழந்தையை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று எரித்து விட்டனர். இதற்கிடையே குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒருவருக்கொருவர் பரபரப்பாக பேசிக்கெண்டனர். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு பெண், ‘குடுகுடுப்பைகாரர் ஒருவர் அடிக்கடி வந்து குழந்தையின் பாட்டி மகேஸ்வரியை (செந்திலின் சித்தி) சந்தித்து சென்றதாக தெரிவித்தார்.

மேலும் சம்பவத்தன்று பகல் 12 மணிக்கு மகேஸ்வரி ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு மாடிக்கு போனதையும் பக்கத்து வீட்டு பெண் பார்த்துள்ளார். நைசாக தனது கணவருடன் சேர்ந்து அந்தப் பெண் பின்தொடர்ந்து சென்றபோது குழந்தையை தண்ணீர் வாளிக்குள் போட்டு மகேஸ்வரி அழுத்திக்கொண்டு இருந்தாள்.

இதைப்பார்த்து திடுக்கிட்ட பக்கத்து வீட்டு பெண், மகேஸ்வரியிடம் ‘என்ன செய்கிறாய்’ என்று கேட்டார். அதற்கு அவர், ஒன்றுமில்லை என்று சமாளித்து கணவன் -மனைவியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பேசி அமரவைத்தாள். பேசிக்கொண்டு இருந்தபோதே அவர்களை உள்ளே வைத்து பூட்டி விட்டு வெளியே வந்த மகேஸ்வரி வாளியுடன் குழந்தையை வேறு இடத்தில் மறைத்து வைத்தாள். அதன்பிறகு கணவன் -மனைவியை திறந்து விட்டாள். இதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் செந்திலும், கீதாவும் தங்கள் குழந்தை வாளியில் இறந்து கிடப்பதை பார்த்து அலறினார்கள். குடுகுடுப்பைக்காரர் வந்து சென்ற பின்பு மகேஸ்வரியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாலும், அவர் பதட்டத்துடன் காணப்பட்டதாலும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த தகவலை கேட்டு செந்திலின் உறவினர் ஞானப்பிரகாசம், மகேஸ்வரியை மிரட்டி கேட்டார். அப்போது அவர் குழந்தையை நரபலி கொடுக்க கொன்றதாக ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து அங்கு பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் மகேஸ்வரியை பிடித்து எம்.கே.பி.நகர் போலீசில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி மகேஸ்வரியை கைது செய்தனர்.

##~~##
அப்போது, காவல்துறையினரிடம் மகேஸ்வரி அளித்துள்ள வாக்குமூலத்தில் "நான் எனது கணவர் ராமுடன் வசித்து வருகிறேன். எங்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் எனது அக்காள் மகன் செந்தில் வசித்து வருகிறார். எனது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது. சில நாட்களுக்கு முன் எங்கள் தெரு வழியாக ஒரு குடுகுடுப்பைக்காரர் சென்றார். அவர் எனது வீட்டுமுன் நின்று, ‘இந்த வீட்டுக்கு தோஷம் இருக்கிறது. தோஷம் கழித்தால் நிவர்த்தியாகும்’ என்று சொன்னார்.
உடனே அவரை வீட்டுக்குள் அழைத்து ஆலோசனை கேட்டேன். அவர், ‘உங்கள் வீட்டின் மீது திருஷ்டி விழுந்துள்ளது. ஏதாவது பலி கொடுத்தால் சரியாகி விடும்’ என்று சொல்லி சென்றார். அதன்பிறகு மீண்டும் தோஷம் கழிக்க வந்தார். மந்திரங்கள் சொல்லி விபூதி பூசினார். தோஷம் கழித்ததற்காக ரூ.2 ஆயிரம் கேட்டார். என்னிடம் ரூ.1000தான் இருந்தது. அதை வாங்கிக்கொண்டு சென்று விட்டார். அவர் சென்றபிறகு எனக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது.
அன்று அமாவாசை தினம் என்பதால் பகல் 12 மணிக்கு விளையாடிக் கொண்டு இருந்த செந்திலின் குழந்தையை தூக்கிக்கொண்டு மாடிக்கு சென்றேன். மாடியில் வைத்து குழந்தையின் கழுத்தை நெரித்தேன். பின்னர் பேரலில் இருந்த தண்ணீரில் போட்டு அமுக்கினேன். இதை பக்கத்து வீட்டுப் பெண் பார்த்து விட்டார். அவரை நைசாக பேசி சமாளித்து அனுப்பி விட்டேன். ஆனால் அக்கம் பக்கத்தினருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டு விட்டது. இதனால் நான் உண்மையை ஒப்புக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.
சென்னையில் 2 வயது குழந்தை நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.