Published:Updated:

இந்தியா

இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
இந்தியா

என். சொக்கன்

இந்தியா

என். சொக்கன்

Published:Updated:
இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
இந்தியா

ஓஹோ ஓலா படகுச்சவாரி!

சா
லையில் இறங்கி ஆட்டோ, டாக்ஸியைத் தேடிக்கொண்டிருந்த நாள்களெல்லாம் மாறிவிட்டன. மொபைலை எடுத்து க்ளிக் செய்தால் வீட்டுவாசலில் வண்டி வந்துநிற்கிறது.

இந்தியா

மொபைல் போன் அடிப்படையிலான டாக்ஸி, ஆட்டோ சேவைக்காகப் புகழ்பெற்ற ஓலா நிறுவனம் இப்போது புதிய வசதியாகப் படகுச்சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அஸ்ஸாமின் கௌஹாத்தியில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது.

அஸ்ஸாமில் நீர்வழிப்போக்குவரத்தைப் மக்கள் பயன்படுத்திவருகிறார்கள். அதை நவீனமயமாக்கும் முயற்சியாக ஓலாவின் படகுச்சேவை தொடங்குகிறது. இதன்மூலம் உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப்பயணிகளும் தங்களுக்குத் தேவையான படகுகளை எளிதில் பதிவுசெய்யலாம், கடனட்டைமூலம் பணம்செலுத்திப் பாதுகாப்பாகச்செல்லலாம். படகுகளை முன்பதிவுசெய்யும் வசதியும் இருக்கிறது.

ஏற்கெனவே பல நகரங்களில் ‘பைக் டாக்ஸி’ எனப்படும் இருசக்கரவாகன டாக்ஸிகள் அறிமுகமாகிவிட்டன. அடுத்து சைக்கிளிலும் டாக்ஸி வந்துவிடுமோ?

இந்தியா

வள்ளல் அஜித் குமார் ராய்!

ங்களூரு பக்கத்தில் விட்லா என்றொரு சிற்றூர். அங்கே ஓர் அரசுப் பள்ளி இருக்கிறது. அதன் வயது 138.

இத்தனை ஆண்டுகளாக இயங்கிவந்தாலும், அந்தப் பள்ளியில் போதுமான வசதிகள் இல்லை. இருக்கிற சொற்ப இடத்தை வைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் சமாளித்துக்கொண்டிருந்தார்கள்.  சில மாதங்களுக்குமுன்னால், அந்தப் பள்ளியில் நிர்வாகிகள் தங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு பெரியமனிதரைச் சென்று பார்த்தார்கள், ‘ஐயா, நீங்கள் படித்த பள்ளிதான் இது. இன்றைக்கு மிக மோசமான நிலைமையில் உள்ளது. ஏதாவது உதவிசெய்யுங்கள்’ என்றார்.

‘ஓ, தாராளமாக உதவிசெய்யலாமே’ என்று சிரித்தார் அந்தப் பெரிய மனிதர். ஏதோ ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய் கொடுப்பார் என்று பார்த்தால், 1.25 கோடி ரூபாய் செலவில் பள்ளிக்கு ஒரு புத்தம்புதுக் கட்டடத்தைக் கட்டிக்கொடுத்துவிட்டார்!

அஜித் குமார் ராய் என்ற அந்தப் பெரியமனிதரை இன்றைக்கு ஊரே புகழ்கிறது, ‘இதுபோல் சிறுபள்ளிகளில் படித்து முன்னேறியவர்கள் தங்களுடைய பழைய பள்ளிகளுக்கு உதவிசெய்தாலே போதும், நம் நாட்டில் இன்னும் லட்சக்கணக்கான அறிவாளிகள் உருவாவார்கள்’ என்று பாராட்டுகிறார்கள்.

இந்தியா

மெகா காற்றாலை!

டந்த சில ஆண்டுகளாகவே உலகெங்கும் காற்றாலைகளின்மூலம் மின்சாரம் தயாரிக்கும் முயற்சிகள் பிரபலமாகிவருகின்றன. இந்தியாவிலும் ஆங்காங்கே காற்றாலைகளைப் பார்க்கிறோம்.

ஆனால், இந்தக் காற்றாலைகள் சுமார் 2 மெகாவாட் திறன்கொண்டவை. அபூர்வமாக யாரேனும் 3 மெகாவாட் காற்றாலைகளைத் தயாரிப்பதுண்டு.

இப்போது, ஜெர்மனியைச்சேர்ந்த காற்றாலைத் தயாரிப்பாளரான எனெர்கான் இந்தியாவில் 3.5மெகாவாட் திறனுள்ள காற்றாலைகளைத் தயாரிக்க முன்வந்திருக்கிறது. இவை 131மீட்டர் உயரத்துக்குமேல் இருக்கப்போவதால், மின்சார உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும் என்கிறார்கள்.

இந்தியா

‘பெட்’ ரெஸ்ட்டரெண்ட்ஸ்!

செ
ல்லப் பிராணிகளுக்குப் பொதுவாக வீட்டில் சமைக்கும் உணவையே தருவதுதான் வழக்கம். அவையும் சாம்பார் சாதத்தில் தொடங்கி மசால்வடை வரைக்கும் நன்றாக வெளுத்துக்கட்டும்.

ஆனால், சமீபகாலமாக இந்தியாவில் இந்த வழக்கம் மாறிவருகிறது. மேலைநாடுகளைப் போல் இங்கேயும் செல்லப் பிராணிகளுக்கான சிறப்பு உணவுகள் கிடைக்கின்றன. இதற்கென்று தனிக்கடைகளும் வந்துவிட்டன. பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் குதித்திருக்கின்றன.

‘இந்தியாவில் சுமார் இரண்டு கோடி செல்லப்பிராணிகள் இருக்கின்றன’ என்கிறது நெஸ்லே நிறுவனம். ‘ஆகவே, இங்கே செல்லப்பிராணிகளுக்கான சிறப்பு உணவுகளைத் தயாரிக்கும் சந்தை மிகப்பெரியது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இருமடங்காக வளரப்போகிறது’ என்று இவர்கள் கணித்துள்ளார்கள்.

யார் கண்டது, விரைவில் நாய்களுக்கான சிறப்பு ஹோட்டல், பூனைகளுக்கான ஃபுட்கோர்ட் எல்லாம் வந்துவிடுமோ என்னவோ!

இந்தியா

பெற்றோருக்கு வேலை...குழந்தைகளுக்குக் கல்வி!

பெ
ற்றோர் கூலிவேலைக்குச் செல்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் என்ன ஆவார்கள்?

சிலர் சிறிதுகாலம் பள்ளிக்குச் செல்வார்கள், அதன்பிறகு, அவர்களும் அதே கூலிவேலைக்கு இழுக்கப்பட்டுவிடுவார்கள்.

ஆனால், குழந்தைகளை வேலைக்குச் சேர்க்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறதே.

இதுபோன்ற ஆபத்திலிருக்கும் பிள்ளைகளுக்கு முறையான கல்வியைத் தருவதற்குத் தெலங்கானாவில் ஒரு புதுமையான ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள்: பெற்றோர் கூலிவேலை செய்யும் இடங்களிலேயே பிள்ளைகளுக்குப் பள்ளிகளைத் திறந்திருக்கிறார்கள்!

பெத்தகொண்டூர், ரவிரலா என்ற இரு கிராமங்களில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பள்ளிகள் விரைவில் இன்னும் பல இடங்களுக்கு விரிவடையும் என்கிறார்கள். மற்ற மாநிலங்களும் இதேபோன்ற முயற்சிகளைத் தொடங்கினால் சீக்கிரத்தில் குழந்தைத் தொழிலாளர் கொடுமையை அழித்துவிடலாம்!

இந்தியா

ஜங்க் ஃபுட் விளம்பரங்களுக்குத் தடை!

பெ
ரும்பாலான குழந்தைகள் தொலைக்காட்சியை இயக்கியவுடன் முதலில் கார்ட்டூன் சானல்களுக்குத்தான் ஓடுகிறார்கள். அங்கே வரும் பலவிதமான கதாபாத்திரங்கள், சுவையான நிகழ்வுகள், பேச்சுகளெல்லாம் அவர்களைக் கவர்ந்திழுக்கின்றன.

ஆனால், அதே சானலில் வரும் விளம்பரங்களைக் கவனித்திருக்கிறீர்களா? குப்பை உணவுகள் என்று சொல்லப்படும் சாக்லேட், பர்கர், பீட்ஸா, எண்ணெய்ப் பண்டங்கள், கோலா பானங்களின் விளம்பரங்கள்தாம் அதிகம் இடம்பெறுகின்றன. இவற்றைத் தொடர்ந்து பார்க்கும் குழந்தைகள் அவ்வகை உணவுகளை அதிகம் உட்கொள்ளும் பழக்கத்துக்குத் தூண்டப்படுகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு உடல்பருமன் அதிகரிக்கிறது, நோய்களும் விரைவாக அவர்களைத் தாக்குகின்றன.

இதைக் கருத்தில்கொண்டு, இந்திய அரசாங்கம் கார்ட்டூன் சானல்களில் இவ்வகை உணவுப்பொருள்களின் விளம்பரங்களைத் தடுத்திருக்கிறது. இதன்மூலம், குழந்தைகள் ஊட்டச்சத்தில்லாத உணவுமுறையைப் பின்பற்றுவது குறையும் என எதிர்பார்க்கிறார்கள்.

இந்தியா

தெரியுமா?

இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் இடம், பாக் ஜலசந்தி.

இந்தியா

தெரியுமா?

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ எனும் புகழ்பெற்ற நாவலை எழுதியவர், ஜெயகாந்தன்.