அமெரிக்காவில் கலைப் பொருள் திருட்டு 1990

1990-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி அமெரிக்காவில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. பாஸ்டன் நகரில் உள்ள ‘இஸபெல்லா ஸ்டூவார்ட் கார்ட்னர்’ மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 12 ஓவியங்கள் ஒட்டு மொத்தமாகத் திருடு போயின.

எழுத்தாளர் லக்ஷ்மி பிறந்த நாள் 1921

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இயற்பெயர் திரிபுரசுந்தரி. சமூகச் சிறுகதைகள், சமூக நாவல்கள் என்று எழுதிய இவருடைய வாசகர் வட்டம் பெரியது. எளிமையான நடையில்அமைந்த இவருடைய கதைகள், வாசகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றன. இவருடைய பிறந்த நாள் மார்ச் 21, 1921.

உலக வன தினம்

உலகில் பருவம் தப்பாத கால நிலை மற்றும் சீரான கால நிலை இருப்பதற்குக் காடுகள் முக்கியம். காடுகள் அழிவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்கு ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21 -ம் தேதி உலகக் காடுகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு நாடு நல்ல வளமாக இருக்க வேண்டுமானால் 33 சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும். தமிழ் நாட்டில் 17 சதவிகிதக் காடுகள் மட்டுமே இருக்கின்றன.

உலக நீர் தினம்

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 -ம் தேதி உலக நீர் நாள் கொண்டாடப்படுகிறது. 1992-ம் ஆண்டு பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ-டி-ஜெனிரோ நகரில் நடந்த சுற்றுச்சூழல் மாநாட்டில் 193 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்றுதான் உலக நீர் நாள் கொண்டாட்டம். நீர் வளத்தின் ஒட்டு மொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர்ப் பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என்பதே இந்த நீர்நாள் கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம் 1931

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தாய் நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள் மார்ச் 23, 1931. சைமன் தூதுக்குழு இந்தியாவுக்கு வந்தபோது அதை எதிர்த்து லாலா லஜபதிராய் தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது போலீஸார் நடத்திய தடியடியில் லஜபதிராய் காயமடைந்து உயிர் நீத்தார். இதற்குப் பழிவாங்க ராஜகுரு, பகத்சிங், சுகதேவ் ஆகியோர், தடியடி நடத்திய ஆங்கில போலீஸார் சாண்டஸ் என்பவரைச் சுட்டுக் கொன்றனர். இதற்காக மூன்று பேரும், 1931-ம் ஆண்டு மார்ச் 23 -ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். இந்திய விடுதலைக்காக இன்னுயிர் நீத்த இவர்களை இந்நாளில் நினைவு கூர்வோம்.

தமிழ் விக்கிபீடியா அறிமுகம் 2010

எது பற்றித் தேடினாலும் அது குறித்த தகவல்களை அள்ளித்தரும் கலைக்களஞ்சியம் விக்கிபீடியா. தகவல்களைத் தமிழில் தேடுவோருக்குக் கிடைக்கும் வண்ணம் 27.03.2010 ஆம் ஆண்டு தமிழ் விக்கிபீடியா உருவாக்கப்பட்டது. இதில் ஒரு லட்சம் தமிழ்க் கட்டுரைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. பள்ளிக் கல்வித்துறையின் விருப்பம் விரைவில் நிறைவேறட்டும்.

தெரியுமா?

சித்தன்ன வாசல் ஓவியங்களை வரைய வைத்தவர் - குலோத்துங்கச் சோழன்.