பெரியவர்கள் யாராவது சண்டை போட்டுக்கொண்டால், ‘என்ன சின்னப்பிள்ளைமாதிரி அடிச்சுக்கறீங்க?’ என்பார்கள்.

ஆனால் உண்மையில், சின்னப்பிள்ளைகளின் சண்டைகளெல்லாம் சில நிமிடங்களில் தீர்ந்துவிடும். வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் சண்டைகளைத் தொடர்வது பெரியவர்கள்தாம். அதனால் சின்னப்பிள்ளைகள் உள்பட எல்லாரும் பாதிக்கப்படுவதுதான் கொடுமை.

இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, இப்போது சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போர். ஏழு வருடங்களுக்கு முன்னால் (2011 மார்ச்) பல அரபு நாடுகளில் ஆட்சியாளர்களை எதிர்த்துக் கிளர்ச்சிகள் தொடங்கின. அதன் ஒரு பகுதியாக, சிரியாவிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போதைய ஆட்சியாளர் பஷார் அஸாதை அகற்றவேண்டும் என்று சில குழுக்கள் முயன்றன.

உடனடியாக, அரசாங்கம் அந்தக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கையை எடுத்தது. இதைக் கண்டித்து இன்னும் பல மக்கள் அணிதிரண்டார்கள். அவர்களையும் அரசாங்கம் தாக்கத் தொடங்கியதால், இந்தப் போராட்டம் உள்நாட்டுப்போராக மாறியது.

அடுத்த பல வருடங்களாக, அங்கே யாருக்கும் நிம்மதியில்லை. இதனால், எந்தவிதத்திலும் இதற்குச் சம்பந்தப்படாத பொதுமக்கள், குறிப்பாக, நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்தார்கள், படுகாயமடைந்தார்கள். உயிர்பிழைத்து அங்கே வாழ்வோருக்கும் நல்ல சாப்பாடோ இருப்பிடமோ மருத்துவ வசதிகளோ, படிப்போ இல்லை. சமகாலத்தின் மிகப்பெரிய, மிக நீண்ட பெருந்துயரம் இது.

ஐ.நா.அமைப்பு இந்தப் போரைத் தாற்காலிகமாகவேனும் நிறுத்தவேண்டும் என்று முயன்றுவருகிறது. ஒருவேளை போர் இன்னும் சிலகாலம் தொடர்ந்தாலும், அங்கே இருக்கும் அப்பாவி மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும், அல்லது, அவர்களுக்கு உரிய சிகிச்சைகளைத் தருவதற்காவது வாய்ப்புகள் வேண்டும். இதற்கும் பல அமைப்புகள் முயன்றுவருகின்றன.

ஏற்கெனவே சிரியாவிலிருந்து வெளியேறிய பலர் அக்கம்பக்கத்து நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். பெற்றோரைப் பிரிந்த குழந்தைகள், பிள்ளைகளைப் பிரிந்த பெற்றோர், உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாமல் தவிப்போர் என்று அவர்களுடைய கதையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது.

போரில்லாத உலகம் சாத்தியமா என்று தெரியவில்லை; ஆனால், அப்பாவிக் குழந்தைகளைத் தாக்கிக் காயப்படுத்தும் எந்தச் செயலும் நியாயமானதாக இருக்காது. சிரியக் குழந்தைகளுக்காகவும் பொதுமக்களுக்காகவும் நாம் எல்லாரும் பிரார்த்தனை செய்யவேண்டிய, ஒருமித்த ஆதரவு தந்து, இயன்ற உதவிகளைச் செய்யவேண்டிய நேரம் இது.