ஆவி, பேய் எல்லாம் இல்லை என்பது உங்களில் பலரும் சொல்வதுதான். சிலரோ அவை உண்டு என்று நம்புவீர்கள். ஆவி பற்றிய கதைகளும் பேய் பற்றிய புதிர் நிரம்பிய சம்பவங்களும் ஏராளம் உண்டு. ஆவிகளை நம்புபவர்கள் அதை நிரூபிக்க, போட்டோ, வீடியோ என்று ஆதாரங்களைக் கொடுத்தபடியே இருக்கிறார்கள். அப்படி, பல இடங்களில் பதிவான அமானுஷ்யமான தகவல்கள் இங்கே…

தேவதைகளின் ஆவி!

இங்கிலாந்தின் யார்க்ஷையரில் இருக்கும் கிராமம், காட்டிங்லே. அங்கே எல்ஸீ ரைட், ஃபிரான்சிஸ் க்ரிபித்ஸ் என்கிற இரு சிறுமிகள் சுற்றுலா போனார்கள். ஐந்து போட்டோக்கள் எடுத்துக்கொண்டார்கள். அந்த போட்டோக்களை பிரின்ட் போட்டுப் பார்த்தபோது அதிர்ச்சி; ஆச்சர்யம்! ஃபிரான்சிஸைச் சுற்றிச் சிறகுகள் விரிந்த சின்னச் சின்ன தேவதை உருவங்கள் அந்த போட்டோக்களில் விழுந்திருந்தன!

இந்தப் படங்கள் வெளியானதும் உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. விஞ்ஞானிகளும் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு அந்தப் புகைப்படங்களை ஆராய்ச்சி செய்தார்கள். ஒன்றும் புரியாமல் விட்டுவிட்டார்கள். இந்தப் படங்கள் 1917-ம் ஆண்டு எடுக்கப்பட்டன. 66 ஆண்டுகள் கழித்து 1983-ல் ‘அந்தப் படங்கள் தந்திரமாக எடுக்கப்பட்டவை’ என்று எல்ஸீயும் ஃபிரான்சிஸும் ஒப்புக்கொண்டார்கள்.

லிங்கனின் ஆவி!

ஆபிரஹாம் லிங்கனை ‘அமானுஷ்ய மனிதர்’ என்று சொல்பவர்களும் உண்டு. ஆபிரஹாம் லிங்கனுக்குத் தன்னை ஒருவன் படுகொலை செய்வது, தன் சடலம் வெள்ளை மாளிகையில் கிடத்தப்படுவது என, எல்லாம் கனவாக வந்திருக்கின்றன. இத்தோடு முடியவில்லை இந்த அமானுஷ்யம். ஆபிரஹாம் லிங்கன் இறந்து பல ஆண்டுகள் ஆகியும் அவரது ஆவி வெள்ளை மாளிகையிலேயே அலைவதாகப் பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவரது உருவம் தெரிந்ததாக போட்டோ ஆதாரம் காட்டினார்கள். அவரது குரலைக் கேட்டதாகச் சாட்சியம் சொன்னார்கள். வெள்ளை மாளிகை புதுப்பிக்கப்பட்ட பிறகே ஆபிரஹாம் லிங்கனின் நடமாட்டம் நின்றதாம்.

கப்பலின் ஆவி!

மனிதர்களுக்குத்தான் ஆவி என்று நினைக்கிறீர்களா? ஃப்ளையிங் டட்ச்மேன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லை. இது ஒரு கப்பல். கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு மூழ்கி அழிந்துபோன இந்தக் கப்பல் மறுபடி மறுபடி பலரின் கண்ணுக்குத் தெரிந்ததாம். அத்தனை பெரிய கப்பலில் ஒரே ஓர் எலும்புக்கூடு மட்டுமே இருக்குமாம். அந்த வழியாகப் போகும் பிற கப்பல்களுக்குப் போக்குக்காட்டி, பாறைகளில் மோதச் செய்து சிதறடிக்குமாம்.

இதைப்போலக் கட்டடங்கள், கோட்டைகள், ஏரிகள் போன்றவைக்கும் நடந்திருக்கிறது. பார்பரா கார்ட்லன்ட் எனும் எழுத்தாளர் ஒரு புதிய ஊரில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போது ஒரு கோட்டையைப் பார்த்து ரசித்துவிட்டுப் போயிருக்கிறார். அதே வழியில் திரும்பும்போது அவருக்கு ஓர் அதிர்ச்சி. அந்தக் கோட்டை அங்கே இல்லை. சுத்தமாக, கோட்டை இருந்ததற்கு எந்த அடையாளமும் இல்லாமல் வெறும் பொட்டல் காடாக இருந்திருக்கிறது அந்த இடம். அவர் பார்த்தது, பல ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் அழிந்துபோன ஒரு கோட்டையின் ஆவியாம்!

வீட்டின் ஆவி!

இங்கிலாந்தில் போர்லே ரெக்டரி என்று ஒரு வீடு. இதைப் பற்றி, எழுதப்பட்ட புத்தகங்கள் 1930-களில் விற்பனையில் சக்கைப்போடு போட்டன. இது பேய்களால் சூழப்பட்ட வீடு என்று நாடு முழுக்கப் பிரபலம் ஆயிற்று. ஹென்றி புல் என்பவர் 1863-ம் ஆண்டு ஒரு வீடு கட்டினார். இரண்டு தளங்களில் 23 அறைகள்கொண்ட வீடு. வீட்டைக் கட்டியவர் குடியேறிய நேரத்திலிருந்தே அங்கே பேய்களின் அட்டகாசம் ஆரம்பமாயிற்று. ஒரு கிறிஸ்துவப் பெண் துறவியின் ஆவி அடிக்கடி எல்லோரின் கண்களுக்கும் தென்பட ஆரம்பித்தது. அத்தோடு, ஆவியால் ஓட்டப்பட்ட ஒரு குதிரை வண்டியும் திடீர்த் திடீர் எனத் தெரிந்து மறைய ஆரம்பித்ததாம். பேயோட்ட வந்த ஹாரி பிரைஸ் என்பவர், 40 வருடங்கள் ஆராய்ச்சி செய்துவிட்டு, ‘இதுதான் இங்கிலாந்திலேயே பயங்கரமான பேய்வீடு’ என்று ‘சர்ட்டிஃபிகேட்’ கொடுத்தார். ஆனால், அவரே பேய்கள் வருவதாகக் காட்டுவதற்காகச் சில ‘தில்லாலங்கடி வேலை’களைச் செய்திருக்கிறார் என்பது அவர் இறந்த பிறகு தெரியவந்திருக்கிறது.

தெரியுமா?

இந்தியாவில் அதிக நிலப்பரப்புகொண்ட மாநிலம் ராஜஸ்தான்