ஒரு படம்

புதிய டைனோசர்கள்... ஆனால், பழைய கதை?

1990-களில் சயின்ஸ் ஃபிக்ஷன் வகை படங்களில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜுராசிக் பார்க் படங்களை யாரும் மறந்திருக்க மாட்டோம். அழிந்துபோன ஒரு விலங்கைத் தத்ரூபமாகக் கண்முன் வந்து நிறுத்த, எல்லோராலும் அந்த மூன்று படங்களும் கொண்டாடப்பட்டன. இதன் நான்காவது பாகம் கடந்த 2015-ம் ஆண்டு நவீன தொழில்நுட்பத்துடன் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றிபெற்றது. இப்போது அதன் தொடர்ச்சியாக ஐந்தாம் பாகம், ‘ஜூராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம்’ வரும் ஜூன் மாதம் வெளியாகவிருக்கிறது. படத்தின் டிரைலர்களைப் பார்த்த அனைவரும், இதன் கதை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த இரண்டாம் பாகமான “தி லாஸ்ட் வேர்ல்டு’ போலவே உள்ளதாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். படத்தின் இயக்குநரும் அதையே முன்மொழிந்துள்ளார். இருந்தும் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. டைனோசர்களை 3டி-யில் பார்ப்பது என்றால் சும்மாவா?

ஒரு கேம்

கம்பளிப்பூச்சிக்கு உதவுங்கள் சுட்டீஸ்!

பொதுவாக, மேஸ் (Maze) விளையாட்டுகள் சுவாரஸ்யமானவை. இங்கே ஒரு code-a-pillar என்று அழைக்கப்படும் கம்பளிப்பூச்சி ஒன்று ஒரு மேஸிலிருந்து வெளியே வர உங்கள் உதவியை எதிர்பார்க்கிறது. விதவிதமான லெவல்கள்கொண்ட இந்த கேமில், தடைகள் வந்தால் எப்படிச் சமயோசிதமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்று விளையாடுபவர்களுக்குக் கற்றுத் தருகிறது. திட்டமிடல், வரிசைப்படுத்தல், சிக்கல்களைத் தீர்ப்பது, எண்களை அடையாளம் காண்பது எனப் பல வித்தைகளைக் கற்றுக் கொடுத்து, மூளைக்குத் தகுந்த பயிற்சியை அளிக்கிறது. மூன்று வயதுக் குழந்தைகூட விளையாட முடியும் என்பது இந்த ஆட்டத்தின் தனிச் சிறப்பு!

கூகுள் ப்ளேஸ்டோர் லிங்க்: https://goo.gl/1ogbnG

ஓர் ஆப்

இது குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்ச்!

சுட்டீஸ்களுக்கான ஸ்மார்ட் வாட்ச்களில் கவனத்தை ஈர்க்கிறது இந்த Orbo. ஸ்மார்ட்போன்கள் உள்பட அனைத்து ஸ்மார்ட் சாதனங்களிலும் எளிதாக ‘Pair’ ஆகிவிடும் இதைக்கொண்டு போன் பேசலாம், செல்ஃபி எடுக்கலாம், எத்தனை தூரம் நடந்தோம் எனக் கணக்கிட்டுக் கொள்ளலாம், அட்டகாசமான கேம்களும் ஆடிக்கொள்ளலாம். எப்படி மணி பார்ப்பது, கணக்குகள் மற்றும் புதிர்களுக்கு எப்படி விடைகள் காண்பது போன்றவற்றை எல்லாம் தெளிவாகக் கற்றுத்தருகிறது. 1 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் வரும் இதில் 32 ஜிபி வரை மெமரி கார்டு போட்டுக்கொள்ளலாம். மிகச் சிறந்த பேட்டரியுடன் வருவதால், அடிக்கடி சார்ஜரைத் தேடும் வேலை இருக்காது. இதில் எடுக்கும் படங்களை உங்கள் கணினிக்கு மாற்றிக்கொள்ள USB கேபிள் ஒன்றும் தருகிறார்கள்.

அமேஸான் லிங்க்: https://goo.gl/3KaDuV

ஒரு புத்தகம்

கறுப்பின வேற்றுமையைக் களையச் செய்த விஞ்ஞானம்!

கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த ‘Hidden Figures’ படத்தின் காமிக்ஸ் வடிவம் இந்தப் புத்தகம். குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் ஓவியங்கள்மூலம் ஓர் அசாதாரண கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். விண்வெளித்துறையில் அப்போதைய சோவியத் யூனியனும் அமெரிக்காவும் மறைமுகமாக மோதிக்கொண்டபோது, அமெரிக்காவின் நாசாவுக்கு உதவிய நான்கு கறுப்பினப் பெண்களைக் குறித்த கதை. உண்மைச் சம்பவங்களால் செதுக்கப்பட்ட நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் பெரும் வரவேற்பைப் பெற, இப்போது அதையே குழந்தைகளுக்கான புத்தகமாக வடிவமைத்திருக்கிறார்கள். விண்வெளித்துறையில் சாதிக்க விரும்பும் சுட்டீஸ்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.

அமேஸான் லிங்க்: https://goo.gl/ZQLRND

தெரியுமா?

நமது நாட்டுத் தேசியக்கொடியில் இருக்கும் காவி நிறம், தியாகத்தைக் குறிக்கின்றது.