பசுமைச் சுவர்கள்

பெங்களூரில், மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்ததால் ஊரெங்கும் பெரிய பெரிய கான்கிரீட் தூண்கள். அதைப் பார்க்கும்போதெல்லாம் பெங்களூரின் பழைய பெயரான ‘பூங்கா நகரம்’ என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

‘பிளான் பி’ என்ற அமைப்பினர், இந்தக் காங்கிரீட் தூண்களைக்கொண்டே பெங்களூரின் பூங்காக்களை மீட்கத் தீர்மானித்திருக்கிறார்கள். அதாவது, தூண்களைச் சுற்றிலும் Vertical Gardens எனப்படும் பசுமை அமைப்புகளை உருவாக்கப்போகிறார்கள்.

இந்தப் பூங்காவில், செடிகள் ஒன்றன்மேல் ஒன்றாக, ஏணிபோல் Verticalஆக உயர்ந்துகொண்டே போகும். ஏற்கெனவே பல அலுவலகங்கள், வணிக வளாகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தப் பூங்காக்களை இப்போது மெட்ரோ, ஃப்ளைஓவர் தூண்களிலும் உருவாருக்கப்போகிறார்களாம்.

ஓடி விளையாடு பாப்பா!

மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்துவது நல்ல விஷயம்தான். ஆனால், உட்கார்ந்த இடத்தைவிட்டு எழாமல் எந்நேரமும் படித்துக்கொண்டே இருந்தால் அவர்களுடைய உடல் பருமனாகிப்போகாதா... நலம்சார்ந்த பிரச்னைகள் வராதா?

அதற்காகத்தான் பள்ளிகளில் ‘விளையாட்டு’க்கென்று ஒரு பாடவேளையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், பல பள்ளிகள் அதை ஒழுங்காகப் பின்பற்றுவதில்லை. ஆசிரியர்கள், பெற்றோர்கள்கூட அதை விரும்புவதில்லை, ‘என்ன பெரிய விளையாட்டு? அந்த நேரத்துல நாலு பாடம் நடத்தலாம்’ என்கிறார்கள்.

‘இனிமேல் இந்த வேலையே வேண்டாம்; ஒழுங்கா மாணவர்களை விளையாடவிடுங்க’ என்று எச்சரிக்கிறது CBSE அமைப்பு. இந்த ஆண்டு பள்ளிகளுக்காக அவர்கள் வெளியிட்டுள்ள கையேட்டில், ‘9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குத் தினமும் ஒரு விளையாட்டுப் பாடவேளை இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்கள். இதன்மூலம் மாணவர்களிடையே உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புஉணர்வு வளரும் என்று எதிர்பார்க்கிறார்கள்!

முதல் தீயணைப்புப்படை வீராங்கனை!

நாடெங்கும் விமானநிலைய வசதிகள் விரிவாகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், பாதுகாப்புக்காக நிறைய தீயணைப்புவீரர்கள் தேவைப்படுகிறார்கள். பொதுவாக ஆண்களே செய்துவரும் இந்தப் பணிகளுக்கு தகுதியுள்ள பெண்களையும் தேர்ந்தெடுத்தால் என்ன?

இப்படி யோசித்த இந்திய விமானநிலைய அதிகார அமைப்பு, கொல்கத்தாவைச் சேர்ந்த தனியா சன்யாலை இப்பணிக்குத் தேர்வுசெய்தது. இதன்மூலம் இந்தியாவின் முதல் ‘விமானநிலையத் தீயணைப்புப்படை வீராங்கனை’ ஆகியிருக்கிறார், தனியா சன்யால்!

ஆண் வீரர்களோடு ஒப்பிடும்போது, பெண்களுக்கான எடை, உயரம் போன்ற வரம்புகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பணிகளைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை; அவர்களும் ஆண்களுக்கு இணையாகப் பணியாற்றுவார்கள்.

இது ஓர் ஆரம்பம்தான்!

விழிப்போடு இருக்க வேண்டும்!

ஒருவர் காபி குடிக்க ஸ்கூட்டரை கடை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே செல்கிறார். காபி குடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தால், ஸ்கூட்டரைக் காணோம்.

அவர், காவல் நிலையத்துக்குச் செல்கிறார். புகார் தருகிறார். காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, ‘என்னுடைய வண்டியைக் காணோம் யாரோ திருடிட்டாங்க, அதனால், நீங்க எனக்கு புது வண்டி வாங்க பணம் தரணும்’ என்கிறார்.

எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது என்கிறீர்களா? ஒரே ஒரு பிரச்னை: காபி குடிக்க கடைக்குள் சென்றவர், வண்டியிலேயே சாவியை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். இதை விசாரித்துக் கண்டுபிடித்த காப்பீட்டு நிறுவனம், ‘உங்கள் கவனக்குறைவுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது’ என்று சொல்லி அவருக்குப் பணம் தர மறுத்துவிட்டது. நுகர்வோர் நீதிமன்றமும் சமீபத்தில் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

முதுமை+இளமை=முன்னேற்றம்!

‘ஸ்டார்ட்டப்’ எனப்படும் புதிய தொழில் நிறுவனங்கள், இளைஞர்களின் கோட்டைகள். புதிய கனவுகள், சிந்தனைகளோடு அவர்கள் இந்நிறுவனங்களை நடத்துகிறார்கள். தங்களைப்போலவே ஆர்வமுள்ள இளைஞர்களை வேலைக்குச்சேர்க்கிறார்கள்.

ஆனால், இளமை மட்டும் போதுமா... அனுபவம் வேண்டாமா?

இந்த இரண்டையும் சரிவிகிதத்தில் கலக்கும் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது Truebil என்ற நிறுவனம். மும்பையிலுள்ள இவர்களுடைய அலுவலகத்தில் பணிபுரிகிறவர்களுடைய சராசரி வயது 28 தான். இப்போது, அறுபதைத் தாண்டிய பலருக்குத் தங்களுடைய நிறுவனத்தில் வேலை கொடுக்கத் தொடங்கியிருக் கிறார்கள்.

‘இதன்மூலம் இளைஞர்கள், முதியவர்கள் இருவருக்குமே நன்மை’ என்கிறது இந்நிறுவனம், ‘முதியவர்களுக்கு இந்த வயதில் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு வேலைசெய்கிற மகிழ்ச்சி; இளைஞர்களுக்கு, முதியவர்களிடமிருந்து அவர்களுடைய அனுபவத்தைக் கற்றுக்கொள்கிற வாய்ப்பு!’

அனுபவம் மிக்கவர்களுடைய வழிகாட்டுதலில் இளைஞர்கள் முன்னேறினால் எல்லாருக்கும் மகிழ்ச்சிதான்!

தெரியுமா?

ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டின் பெயர், லிட்டில் பாய்.