மனிதர்களுக்கு மட்டும்தான் காப்பிரைட்

ஒரு குரங்கு செல்ஃபி எடுத்தது, சர்வதேச வைரலானது அனைவரும் அறிந்ததே. ஆனால், குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் செல்ஃபிக்களுக்குக் காப்புரிமை வழங்க முடியாது. மனிதர்களது செயல்களுக்கும் சாதனைகளுக்கும்தான் காப்புரிமை வழங்க முடியும் என்று அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது குறித்த மேல்முறையீட்டையும் நிராகரித்துள்ளது.

கண்டிப்பாகும் ஃபேஸ்புக்

போலிச் செய்திகள், தவறான பதிவுகள், அமெரிக்கத் தேர்தலில் குளறுபடி எனத் தொடர்ந்து பிரச்னைகளை எதிர்கொண்டது ஃபேஸ்புக். இப்போது, இதற்குத் தீர்வு சொல்லும் விதமாக, 27 பக்க விதிமுறைகளை அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் பதிவுகளை உலகம் முழுவதும் 7600 நெறியாளர்கள்மூலம் கண்காணிக்கவும் உள்ளதாம். இனியும் இக்கட்டான சூழலுக்குள் சிக்குவதை ஃபேஸ்புக் விரும்பவில்லையாம்.

வைரலாகும் லேடி ட்ரம்ப்

லுக் அலைக் எனும் ஒருவரை நகலெடுத்தது போலவே இருக்கும் நபர்களைப் பார்த்திருப்போம். எம்.ஜி.ஆர், கருணாநிதி மாதிரி தேர்தல் நேரத்தில் வருபவர்கள் போலவே, அமெரிக்காவில் ட்ரம்ப் போல நிறையப் பேர் இருக்கிறார்கள். இதில் சுவாரஸ்யம், ஸ்பெயினில் விவசாயம் செய்யும் ஒரு பாட்டி பார்ப்பதற்கு ட்ரம்ப் போலவே இருப்பதால் இணையத்தில் வைரலாகி வருகிறார். ட்ரம்ப் மீம்களில் இப்போது அவர்தான் டெம்ப்ளேட்.

பாலைவனத்தில் மாரத்தான்!

சஹாரா பாலைவனத்தில், 33-வது டெஸ் சாபெலஸ் மாரத்தான் நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். வானத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில், மணலில் புழுதி பறக்க ஓடிய ஓட்டம் அருமையான காட்சியாகப் பதிவானது. இந்த போட்டோதான் சென்ற வார ஸ்போர்ட்ஸ் சென்சேஷன்.

கலவர பூமியான நிகாரகுவா

நிகாரகுவாவில், அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இவர்களுக்கும் அரசுக்கும் இடையேயான மோதலில், இதுவரை 25 பேர் இறந்துள்ளனர். இதில், ஒரு பத்திரிகையாளரும் அடங்குவார். சமூகப் பாதுகாப்பு வேண்டி நடக்கும் போராட்டத்தில் அரசு இணங்க மறுப்பதாகப் போராட்டக்காரர்கள் தரப்பு கூறுகிறது.

தெரியுமா?

சீனப் பெருஞ்சுவரின் நீளம், சுமார் 21 மில்லியன் மீட்டர். (21,000 கிமீ)