ஒரே நேரத்தில் 1.75 லட்சம் மாணவர்கள் தமிழ்படித்துச் சாதனை!

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒரே நேரத்தில் 1.75 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழ்ப் படித்து, எழுதி உலக சாதனை நிகழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், இரண்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்வித் திறனைச் சோதித்து, தமிழ்ப் படித்தல் திறனை ஆய்வுசெய்து இந்த உலக சாதனை முயற்சி நடந்தது. 85 ஆயிரம் மாணவர்கள், 90 ஆயிரம் மாணவிகள் என 1.75 லட்சம் பேர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் 470 மையங்களில் 1.75 லட்சம் மாணவர்கள் ஒன்றுதிரண்டு, ஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும் எழுதியும் இந்தச் சாதனையை நிகழ்த்தினர். கடந்த 2003-ம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில், ஒரே நேரத்தில் 72 ஆயிரம் மாணவர்களை வைத்துச் செய்தித்தாள் வாசிக்கும் நிகழ்ச்சியே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையைத் திருவண்ணாமலை மாணவர்கள் முறியடித்துள்ளனர்.

திறக்கப்பட்டது ஆயிரங்கால் மண்டபம்!

கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் வீர வசந்தராயர் மண்டபம் மற்றும் அப்பகுதியில் இருந்த கடைகள் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து, இப்பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும், ஆயிரங்கால் மண்டபமும் மூடப்பட்டது. தற்போது, தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப்பணிகள் பெரும்பான்மை முடிவடைந்துள்ள நிலையில், ஆயிரங்கால் மண்டபத்தைத் திறக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், சித்திரைத் திருவிழா நடந்து வருவதால் ஆயிரங்கால் மண்டபம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

திருடனை விரட்டிப்பிடித்த சிறுவன்!

சென்னைஅண்ணா நகர் பகுதியில் கிளினிக் ஒன்றில் சிகிச்சைக்குச் செல்வதுபோல் சென்று பெண் டாக்டரிடம் செயின் பறித்துச் சென்ற திருடனை, விரட்டிச் சென்று, பிடித்தார் 17 வயது சிறுவன் சூர்யா. பொதுமக்கள் யாரும் உதவ முன்வராத நிலையில், கிளினிக் எதிரே கார் உதிரிபாகக் கடையில் பணியாற்றும் சிறுவன் சூர்யா தான் மட்டுமே திருடனை விரட்டிப் பிடித்துள்ளார். திருடனிடமிருந்த நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சிறுவன் சூர்யாவைத் தனது அலுவலகத்துக்கு அழைத்து, பரிசு வழங்கிப் பாராட்டினார்.

விடைபெற்றது ராஜேஸ்வரி யானை!

பல ஆண்டுகளாக இடது முன்னங்காலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டிருந்தது, சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் இருந்த ராஜேஸ்வரி என்ற பெண் யானை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறந்தது. எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த முன்னங்காலில் கடந்த மாதம் திடீர் வீக்கம் ஏற்பட, படுத்த படுக்கையானது ராஜேஸ்வரி யானை. காலில் ஏற்பட்ட காயங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காத நிலையில், படுத்துக்கொண்டே இருந்ததால் படுக்கைப் புண் ஏற்பட்டு, ஒரு மாதத்துக்கும் மேலாக அவதிப்பட்டது. இதையடுத்து, கோயில் யானையைக் கருணைக்கொலை செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதற்குப் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 21-ம் தேதி சிகிச்சைப் பலனின்றி யானை உயிரிழந்தது. இறந்த யானையின் உடலுக்கு மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், யானை அடக்கம் செய்யப்பட்டது.

தெரியுமா?

‘சாவித்திரி’ எனும் படத்தில், இசைக் கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமி, நாரதர் வேடத்தில் நடித்துள்ளார்.