Published:Updated:

ஒரு குவார்ட்டருக்கு ஒரு இரும்பு கதவு திருடிய நபர் கைது!

ஒரு குவார்ட்டருக்கு ஒரு இரும்பு கதவு திருடிய நபர் கைது!
ஒரு குவார்ட்டருக்கு ஒரு இரும்பு கதவு திருடிய நபர் கைது!

பொள்ளாச்சி: மதுகுடிப்பதற்காக பள்ளியின் கழிவறை இரும்பு கதவை திருடி விற்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் அடிக்கடி சத்துணவு கூடம், கழிப்பறை போன்ற கட்டிடங்களிலுள்ள இரும்பு கதவுகளை லபக் செய்து காயலாங்கடையில் விற்று, ஒரு கும்பல் மது தேவைக்காக விற்று வந்தனர். இரவு நேரங்களில் நடக்கும் இந்த திருட்டு இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று கையும் களவுமாக அந்த திருடர் பிடிபட்டார். பொள்ளாட்சி அடுத்துள்ள கோவிந்தனூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. அங்கு இரவு சுமார் 9 மணியளவில் மர்ம நபர் ஒருவர் புகுந்து அங்குள்ள கழிவறையின் இரும்பு கதவு ஒன்றை பெயர்த்தெடுத்து தலையில் சுமந்தபடி காயலாங்கடையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

##~~##
அவரைப் பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அந்த நபரை விரட்டி பிடித்தனர். அவருக்கு தர்ம அடி கொடுத்து விசாரித்தபோது, குள்ளிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பது தெரியவந்தது. இவர் தன்னுடைய மது தேவைக்காக அக்கம் பக்கத்திலுள்ள கிராமத்தில் இதுபோன்ற இரும்பு கதவுகளை திருடி காயலாங்கடையில் விற்று, அதில் கிடைத்த பணத்தில் மது வாங்கி குடித்து வந்தது தெரியவந்தது.
ஒரு குவார்ட்டருக்காக ஒரு இரும்பு கதவை திருடி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜி.பழனிச்சாமி