Published:Updated:

ஹரிணி எப்போ வருவா? -தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய காவல்துறை!

ஹரிணி எப்போ வருவா? -தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய காவல்துறை!
ஹரிணி எப்போ வருவா? -தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய காவல்துறை!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் போன குழந்தை ஹரிணியை தேடும் முயற்சியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், குழ்ந்தையை கண்டுபிடிக்கும் முய்றசியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இன தம்பதிகளான வெங்கடேசன், காளியம்மாளின் இரண்டு வயது மகள்தான் ஹரிணி. ஒரு மாதத்திற்கு முன்பு அணைக்கட்டு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பவுஞ்சூர் என்ற இடத்தில் இரவில் குடும்பத்தோடு உறங்கியபோது, ஹரிணி காணாமல் போனார்.  இந்த தம்பதியின் வேதனையை போக்க கரூரைச் சேர்ந்த 'இணைந்த கைகள்' என்ற அமைப்பு முன்வந்தது.  கடந்த 8 ம் தேதி,'ஹரிணியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு!' என்று அதிரடியாக அறிவித்தது. அதன்பிறகு, அணைக்கட்டு காவல்துறையும் சுறுசுறுப்பாகி நான்கு தனிப்படைகளையும் அமைத்து ஹரிணியை தேடி வருகிறது. 

ரஜினி ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் ஹரிணியை தேட தகவல்களை பரப்பி வருகிறார்கள். கொல்கத்தாவில் ஹரிணி போல் ஒரு குழந்தை இருக்கிறது என்ற வந்த தகவலை தொடர்ந்து காஞ்சிபுரம் எஸ்.பி தலைமையிலான தனிப்படை அங்கே விரைந்தது. ஹரிணியின் தந்தை வெங்கடேசனையும் கூடவே அழைத்து போனார்கள். நான்கு நாள்கள் நடந்த தேடுதல் வேட்டையில் ஹரிணி சாயலில் இருந்த ஆறு குழந்தைகளை கண்டார்கள், மற்றபடி ஹரிணியை கண்டறியமுடியவில்லை. இதனால்,தனிப்படை சென்னை திரும்பியது. இதற்கிடையில்,கோவையைச் சேர்ந்த அருண் என்ற பஸ் அதிபர் ஹரிணி பற்றிய தகவல்களை நோட்டீஸாக அச்சடித்து பயணிகளிடம் கொடுத்ததோடு, 'ஹரிணியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு அஞ்சு வருடத்துக்கு பஸ் பயணம் இலவசம்' என்று அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஹரிணியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தங்களது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


 


 


.