நவ்ரச்னா என்றால் தெரியுமா?

போரில்லாத வாழ்க்கைதான் நம் ஒவ்வொருவருடைய கனவு, எதிர்பார்ப்பு. யார்மீதும் வலியச்சென்று போரிடுவதில்லை என்பதுதான் இந்தியாவுடைய கொள்கையும். ஆனால், நம்முடைய எல்லைகளைப் பிறருடைய தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக நாமும் ராணுவத்துக்காகக் கணிசமாகச் செலவிடுகிறோம். அதன் ஒரு பகுதியாக, ‘நவ்ரச்னா’ என்ற திட்டத்தை அறிவித்தது DRDO (Defence Research and Development Organization) அமைப்பு. இதில் அடுத்த தலைமுறை ராணுவ யோசனைகள் பலவும் முன்வைக்கப்பட்டன. அதில் எடுத்துக்காட்டாக ஒன்றுமட்டும் இங்கே: எல்லைப் பாதுகாப்பு, மனித உயிருக்கு ஆபத்தான வேறு பணிகளில் ராணுவ வீரர்களுக்குப்பதிலாக இயந்திர மனிதர்களைப் பயன்படுத்தினால் என்ன? வெங்கடேஷ் குமார் த்விவேதி என்ற இளம் ஆய்வாளரின் யோசனை இது. நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விரைவில் நிஜமாகவிருக்கிறது!

வன நேசம்!

நாட்டில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறையினருக்குப் பல விருதுகள், கௌரவங்கள் வழங்கப்படுகின்றன; தேசத்தைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் ராணுவத்தினருக்கும் இதேபோன்ற விருதுகள் உண்டு. வனத்துறையினருக்கு?

மிகச்சமீபத்தில்தான் இந்தத் துறைசார்ந்த திறமையாளர்கள், வீரர்களைக் கௌரவிக்கவேண்டும் என்ற எண்ணமே இந்தியாவில் வந்திருக்கிறது. சில பதக்கங்கள், விருதுகள் அரசாலும் தனியார் நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக, கிரிக்கெட் வீரர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் ‘கானுயிர் சேவை 2018’ விருது சமீபத்தில் ஜே. யோகராஜ் என்ற வனத்துறை ஊழியருக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

யோகராஜ் தன் வன எல்லையைத் தாண்டியும் வ்னத்தைப் பாதுகாப்பாராம். அவருடைய சக ஊழியர்கள் இதற்காக அவரைக் கேலிசெய்வார்களாம், ‘ஏன் இப்படி ஓவரா உழைக்கறே? இதுக்காக உனக்கென்ன விருதா தரப்போறாங்க?’

இப்போது, யோகராஜுக்கு விருது கிடைத்துவிட்டது. ஆனால், அவர் உழைத்தது விருதுக்காக இல்லை; வனத்தின் மீது அவர் கொண்ட அக்கறையினால்தான்!

நகரம் தெரியும், மெகாநகரம் தெரியுமா?

கோடிக்குமேல் மக்கள்தொகை கொண்ட நகரங்களை “மெகாசிட்டி” என்று அழைக்கிறார்கள். 1990-ல் உலகெங்கும் பத்து மெகாநகரங்கள் இருந்தன, இப்போது 33 மெகாநகரங்கள் ஆகிவிட்டன. அடுத்த 12 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 43 ஆக உயரும் என்கிறது ஐ. நா., சபையின் மக்கள்தொகைப் பிரிவு. இந்த வளர்ச்சி பெருமளவு இந்தியா, சீனா, நைஜீரியா ஆகிய நாடுகளில்தாம் இருக்குமாம்.

இந்திய நகரங்களில் மக்கள் தொகை அதிகரிக்கப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது, கிராமங்களிலிருந்து ‘பிழைப்புத்தேடி’ நகரத்துக்கு வரும் மக்கள். இவர்கள் நகரத்தில் நன்றாகச் சம்பாதிக்கிறார்கள், ஓரளவு வசதியாக வாழ்கிறார்கள் என்பதால் இது தனிநபர்களுக்கும் நாட்டுக்கும் நல்லதுதான். அதேசமயம், இப்படி நகரங்களின் மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே சென்றால் அனைவருக்கும் வேண்டிய உணவு, உறைவிடம், தண்ணீர், மின்சாரம், கழிவு அகற்றல், இதர வசதிகளைச் செய்துதர இந்திய நகரங்கள் தயாராக உள்ளனவா? அதைச் சரியாகச் செய்தால்தான் இந்த வளர்ச்சியை எண்ணி நாம் பெருமைப்படமுடியும், இல்லையென்றால் வெறும் கான்க்ரீட் காடுகள், போக்குவரத்து நெரிசலும் சுற்றுச்சூழல் மாசும் மிகுந்த நகரங்களில்தாம் நாம் வாழவேண்டியிருக்கும்.

பெருகி வரும் ஆன்லைன் வர்த்தகம்!

இந்தியாவில் மின்வணிகத்துறையில் போட்டி என்றுபார்த்தால், உள்ளூர் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டுக்கும் பன்னாட்டுநிறுவனமான அமேசானுக்கும்தான். இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு தங்களுடைய இணையதளங்களைப் பிரபலமாக்குகிறார்கள், விளம்பரங்களைத் தருகிறார்கள், சலுகைகளை வழங்குகிறார்கள்.

இந்தப்போட்டி, இப்போது இன்னும் சூடாகிவிட்டது. காரணம், சர்வதேச அளவில் அமேசானின் முக்கியப் போட்டியாளர்களில் ஒருவரான வால்மார்ட் நிறுவனம் 16 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து ஃப்ளிப்கார்ட்டின் பெரும் பகுதியை(77%) வாங்கிவிட்டது. இதன்மூலம் இன்னும் அதிகமான தொழில்முயற்சிகளில் ஈடுபடுவதற்கான நிதிஆதாரங்களும் தொழில்நுட்பமுதலீடும் ஃப்ளிப் கார்ட்டுக்குக் கிடைக்கும். அமேசான், வால்மார்ட் நிறுவனங்கள் இந்தியாவிலும் நேரடியாக மோதுகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வால்மார்ட் இப்படியொரு பெருந்தொகையை இந்தியாவில் முதலீடுசெய்திருப்பது ஏற்கெனவே இங்கே இயங்கிவரும் பல நிறுவனங்களுக்கு ஊக்கம் தந்துள்ளது. மற்ற பல பெரிய நிறுவனங்களும் இந்தியச் சந்தையைக் கூர்ந்து கவனிக்கத்தொடங்கியிருக்கிறார்கள்.

தெரியுமா?

பெருமைமிகு கல்லணையைக் கட்டியவர், கரிகால் சோழன்.