ஊட்டியில் மலர்க் கண்காட்சி!

ஆண்டுதோறும் கோடை காலங்களில் சுற்றுலாப் பயணிகளைக் கவர, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மலர்க் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு, ஊட்டி தாவரவியல் பூங்காவில், 122-வது மலர்க் கண்காட்சி 5 நாள்கள் நடந்தது. மலர்க் கண்காட்சியையொட்டி, ஒரு லட்சம் கார்னேசன் மலர்களைக் கொண்டு 25 அடி உயரம்கொண்ட மேட்டூர் அணை, `பார்பி டால்’, `செல்ஃபி ஸ்பாட்’ ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. இந்த மலர் அலங்காரங்கள், சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது. மேலும், லில்லி மலர்கள், டூலிப் மலர்கள் மற்றும் பல்வேறு வகையான மலர்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. பூங்காவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 35 ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கண்டுகளித்தனர்.

பள்ளிகளின் வேலை நாள்கள் இனி 185!

தமிழகப் பள்ளிகளில் பழைய பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் எனப் பல்வேறு கல்வி அமைப்புகள் கோரிவரும் நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்தப் புதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாகச் சில நாள்கள் பாடம் நடத்தவேண்டி இருப்பதால், பள்ளியின் மொத்த வேலை நாள்கள் 185 ஆகின்றன. வழக்கமாக 170 நாள்கள் நடத்தப்படும் பாடத்திட்டம், இந்த முறை 15 நாள்கள் கூடுதல் ஆகியுள்ளது.

10-ம் வகுப்புத் தேர்வில் அரசுப் பள்ளிகள் சாதனை!

தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. பிளஸ் 2 தேர்வில் 91.1 சதவிகித மாணவர்கள் தேர்ச்சிபெற்றனர். இது, கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை விட ஒரு சதவிகிதம் குறைவாகும். வழக்கம்போல மாணவியர்களே அதிக அளவில் தேர்ச்சிபெற்றனர். 231 மாணவர்கள், 1180-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். இதேபோல, பத்தாம் வகுப்பில் 94.5 சதவிகித மாணவர்கள் தேர்ச்சிபெற்றனர். இது, கடந்த ஆண்டை விட 0.1 சதவிகிதம் அதிகம். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில், அரசுப் பள்ளிகள் 91.36 சதவிகித தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்துள்ளன.

மிரட்டும் நிபா வைரஸ்!

கேரளாவில், மர்மக் காய்ச்சலுக் குள்ளாகி பலர் உயிரிழக்க... பலியானவர்களின் ரத்த மாதிரியை எடுத்து சோதித்தபோது, இந்த காய்ச்சலுக்கு ‘நிபா’ என்ற வைரஸ் காரணம் என்பது தெரியவந்தது. கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் தாக்கிப் பலர் உயிரிழக்க... தென்மாநிலங்களில் இது பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டது. இதையடுத்து, கேரளாவையொட்டிய 4 மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

தெரியுமா?

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன.