Published:Updated:

உலகம்

உலகம்
பிரீமியம் ஸ்டோரி
உலகம்

ச.ஸ்ரீராம்

உலகம்

ச.ஸ்ரீராம்

Published:Updated:
உலகம்
பிரீமியம் ஸ்டோரி
உலகம்
உலகம்

செவ்வாயில் ஒரு செல்ஃபி!

செவ்வாய் கிரக ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுவரும் ஆப்பர்சூனிட்டி ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் புழுதிப் புயல் வீசுவதற்குமுன் ஒரு செல்ஃபியை கிளிக்கியுள்ளது. இந்தப் புகைப்படத்தை தன் அறிக்கையில் நாசா வெளியிட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாகச் செவ்வாயில் புழுதிப்புயல் வேகமாக வீசி வருவதாகவும் கூறியுள்ளது. இது விண்கலத்தின் கேமராக்களுக்குச் சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்பர் 1 நடால்!

ஹாலே ஓப்பன் இறுதிப்போட்டியில் கோரிக்கிடம் தோல்வியடைந்த ஃபெடரர் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்துக்குப் பின்தங்கினார். அதேசமயம் 11-வது முறையாக பிரெஞ்சு ஓப்பன் பட்டம் வென்ற நடால் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். காயம் காரணமாக சில தொடரில் விளையாடாமல் இருந்த நடால் தற்போது முழு வேகத்தில் ஆடி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

உலகம்

பசியால் வாடும் நாடுகள்!

க்கிய நாடுகள் சபையின் ‘நிலையான வளர்ச்சி இலக்குகள் 2018’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கையில், ‘உலக அளவில் 38 மில்லியன் மக்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 777 மில்லியனாக இருந்து, 2016-ம் ஆண்டில் 815 மில்லியனாக அதிகரித்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய நாடுகளின் சராசரி, உலக சராசரியைவிட பல மடங்கு அதிகம். இதற்கான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் முன்வந்து உதவ வேண்டும் என்று ஐ.நா கூறியுள்ளது.

உலகம்

நூற்றாண்டின் பெரிய சந்திரகிரகணம்!

ஜூலை 27, 28-ம் தேதிகளில் நடக்கும் சந்திர கிரகணம்தான் 21-ம் நூற்றாண்டின் பெரிய சந்திர கிரகணம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ‘சூப்பர் ப்ளூ ப்ளர் மூன்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு 1 மணி நேரம் 43 நிமிடங்களுக்கு நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் ஏற்படும் இரண்டாவது சந்திரகிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம்
உலகம்

81 கோடி செலவு!

சிங்கப்பூரில் ஜூன் 12-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் சந்திப்பு நிகழ்ந்தது. இந்தச் சந்திப்புக்காக சிங்கப்பூர் அரசு 81.6 கோடி ரூபாயைச்  செலவழித்துள்ளது. வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த சந்திப்பை சிங்கப்பூர் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்தச் சந்திப்பின்போது பாதுகாப்புக்குதான் அதிகத் தொகை செலவழித்தோம். இரு நாடுகளுக்குமே பாதுகாப்பு ஏற்பாடுகள் மகிழ்ச்சியளித்தன என்கிறது சிங்கப்பூர் அரசு.

தெரியுமா?

இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism