Published:Updated:

இந்தியா

இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
இந்தியா

என். சொக்கன்

இந்தியா

என். சொக்கன்

Published:Updated:
இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
இந்தியா

சுற்றுலாச் சலுகை!

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அங்கே நாம் வாங்கும் பொருள்களுக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால், ஊருக்குத் திரும்பும்போது விமானநிலையத்தில் அந்த வரியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தியாவில் GST வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது, `வெளிநாட்டுப் பயணிகள் இங்கே வாங்கிய பொருள்களுக்குச் செலுத்திய வரியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்’ என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தமுறை இன்னும் அமலுக்கு வரவில்லை. இது சுற்றுலாத்துறைக்குப் பெரிய பின்னடைவாக இருக்கிறது.

இந்தியா

சமீபத்தில், இந்திய அரசு சுற்றுலாப் பயணிகளுக்கு GST-யைத் திரும்பத் தரும் ஏற்பாடுகளை அறிவித்திருக்கிறது. ஆரம்பத்தில் பெரிய கடைகளில் வாங்கிய பொருள்களுக்கான GST-யை மட்டுமே திரும்பப் பெற இயலும். படிப்படியாக, இது எல்லாப் பொருள்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் செலவுச்சுமை குறையும். இன்னும் அதிக பேர் நம் நாட்டுக்கு வருவார்கள் என நம்பலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரயிலில் ஓர் உளவாளி!

ந்தியாவின் பெரும்பகுதி, ரயில் போக்குவரத்தால் இணைக்கப்பட்டிருக்கிறது. முக்கிய நகரங்கள் மட்டுமின்றி, இரண்டாம்நிலை நகரங்கள், கிராமங்களுக்குக்கூட ரயில் வசதி இருக்கிறது. ஆனால், அந்த ரயில்களில் வழங்கப்படும் சேவைகளின் தரமோ சுமார்தான். சாப்பாடு, இருக்கை, கழிவறை எனப் பல விஷயங்களில் மக்கள் `சமாளித்துக்கொண்டுதான்’ பயணிக்கின்றனர். இதுதொடர்பாக எத்தனை புகார்கள் கொடுத்தாலும் அதற்கான பதில் கிடைப்பதில்லை.

இந்தியா

இந்திய ரயில்வே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொண்டு, ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியிருக்கிறது. ரயில்களில் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை உறுதிசெய்வதற்காக,  ரகசிய உளவாளிகளை அனுப்பவிருக்கிறது.

இவர்கள், வழக்கமான பயணிகளைப்போலவே பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு ரயில்களில் செல்வார்கள். சாப்பாடு வாங்கிச் சாப்பிடுவார்கள். ரயிலை விட்டு இறங்கியதும், அந்த ரயிலில் வழங்கப்பட்ட வெவ்வேறு சேவைகளைப் பற்றிய அறிக்கையை ரயில்வே நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியா

குதிரையில் பயணம்!

பெ
ங்களூருவில், கடந்த பல ஆண்டுகளாகப் பணிபுரியும் ரூபேஷுக்கு, தினமும் போக்குவரத்தில் சிக்கிச் சிரமப்பட்டு அலுவலகம் செல்வது பிடிக்கவில்லை. அதனால், தன்னுடைய சொந்த ஊருக்கே (ராஜஸ்தான்) சென்றுவிடலாம் எனத் தீர்மானித்திருக்கிறார். பெங்களூரில் பணிபுரியும் கடைசி நாள், கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என, அலுவலகத்துக்கு குதிரையில் சென்றிருக்கிறார். இதன்மூலம், இந்த நகரின் போக்குவரத்துப் பிரச்னையைப் பற்றி உலகுக்கே தெரிவித்துவிட்டார். அலுவலகத்துக்கு காரில் செல்லலாம்; பேருந்தில் செல்லலாம்; நடந்துகூடச் செல்லலாம்.  யாராவது குதிரையில் செல்வார்களா?

என் பெயர் K2-236b!

சூரியனைச் சுற்றி இருக்கும் கோள்களை நாம் அறிவோம். இப்படி வானில் பற்பல நட்சத்திரங்களைச் சுற்றியும் கோள்கள் இருக்கின்றன. அவற்றை அறிவியலாளர்கள் கண்டறிந்து பதிவுசெய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், தற்போது புதிய கோள் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன்மூலம், சர்வதேச அளவில் புதிய கோள்களைக் கண்டறிந்த நாடுகளின் பெருமைக்குரிய பட்டியலில் இந்தியாவும் நுழைந்துள்ளது.

இந்தியா

பூமியிலிருந்து 600 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இந்தக் கோளின் பெயர் `K2-236b’. இது, K2-236 என்ற நட்சத்திரத்தைச் சுற்றிவருகிறது. அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆய்வுக்கூடத்தில், பேராசிரியர் அபிஜித் சக்ரபர்தி தலைமையிலான குழு ஒன்று இந்தக் கோளைக் கண்டறிந்திருக்கிறது.

இந்தப் புதிய கோளின் ஆரம், நம்முடைய பூமியின் ஆரத்தைவிட ஆறு மடங்கு பெரியது. இதன் நிறை 27 பூமிகளுக்குச் சமம். முக்கியமாக, இங்கே 19.5 நாள்களில் ஓராண்டு நிறைவடைந்துவிடும்!

20 நாள்களுக்கு ஒருமுறை பிறந்தநாள் கொண்டாடலாம் என அங்கே சென்றுவிட முடியாது. மிகுந்த வெப்பம்கொண்ட (சுமார் 600 டிகிரி செல்ஷியஸ்) இந்தக் கோளில், மனிதர்கள் வாழ்வது சாத்தியமில்லையாம்.

தெரியுமா?

‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ எனும் நூலை எழுதியவர் பாரதிதாசன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism