Published:Updated:

தமிழ்நாடு

தமிழ்நாடு
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு

ஜெ.ரவி

தமிழ்நாடு

ஜெ.ரவி

Published:Updated:
தமிழ்நாடு
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு
தமிழ்நாடு

மதுரையில் எய்ம்ஸ்!

மிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. மதுரை அருகே உள்ள தோப்பூரில் 200 ஏக்கரில் ரூ.1,500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிரது. 200 ஏக்கரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை, 750 படுக்கை வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் உருவாகிறது. 100 எம்.பி.பி.எஸ் இடங்களுடன் எய்ம்ஸ் உருவாகிறது. 1,500 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் உத்தரவை வரவேற்று, இதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் எனத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ப்ளஸ் ஒன், பிளஸ் டூ மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தாள்!’

டந்த ஆண்டு முதல் பிளஸ் ஒன் வகுப்புக்கு பொதுத் தேர்வுமுறை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தற்போது பிளஸ ஒன், பிளஸ் டூ மொழிப்பாடங்களில் இதுவரை இருந்த 2 தாள்கள் முறை ரத்து செய்யப்பட்டு ஒரே தாள் என்ற முறை புகுத்தப்பட்டுள்ளது.  மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் மேனிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டுத் தேர்வுகளில் தற்போது நடைமுறையில் உள்ள மொழிப்பாடம், ஆங்கிலப் பாடம் ஆகியவற்றில் உள்ள இரண்டு தாள்கள் எழுதுவதற்குப் பதிலாக ஒரே தாளாகத் தேர்வு எழுத அரசு ஆணையிட்டுள்ளதாகவும், மொழிப் பாடத்தில் 2 தாள்கள் வீதம்  எழுதுவதால் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். மேனிலை வகுப்புகளில் 8 தேர்வுகளுக்குப் பதிலாக 6 தேர்வுகளாகக் குறைக்கும் போது மாணவர்களின் மன அழுத்தம் குறையும் என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

பொதுத்தேர்வுகள், முடிவுகள் எப்போது?

மிழகத்தில் பொதுத் தேர்வுகளான பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன், மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகளின் கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்கள் குறித்த விவரங்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் டூ தேர்வு 2019 மார்ச் 1ம் தேதி தொடங்கி, 19ம் தேதி முடியும். ஏப்ரல் 19ம் தேதி தேர்வு முடிவு வெளியாகும். பிளஸ் ஒன் தேர்வு, 2019 மார்ச் 6ம் தேதி தொடங்கி, 22ம் தேதி முடியும். தேர்வு முடிவு மே 8ம் தேதி வெளியாகும். பத்தாம் வகுப்புத் தேர்வு 2019 மார்ச் 14ம் தேதி தொடங்கி  29ம் தேதி முடியும். தேர்வு முடிவு ஏப்ரல் 29ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “பள்ளி மாணவர்கள் எந்தவித மன அழுத்தமும் இல்லாமல் தேர்வு எழுதுவதற்கு வசதியாக ஆசிரியர்கள் முன்னதாகவே மாணவர்களைத் தேர்வுக்குத் தயார் செய்யும் வகையில் தேர்வுத் தேதிகள் இந்த ஆண்டும் முன்னதாகவே அறிவிக்கப்படுகிறது,” என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

50 அடி கிணற்றில் விழுந்த 3 காட்டு யானைகள்!

த்தியமங்கலம் அருகே 50 அடி ஆழக் கிணற்றில் விழுந்த 3 காட்டு யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. சத்தியமங்கலம் அருகே உள்ள கானக்குந்தூர் மலை கிராமத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டுயானைகள் விளைநிலங்கள் வழியாகச் செல்வது வழக்கம். அதன்படி வனத்திலிருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் தோட்டம் ஒன்றில் நுழைந்தபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த 50 அடிக் கிணற்றில் விழுந்தன.  தண்ணீரில் யானைகள் தத்தளிப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், வனத்துறைக்குத் தகவல் அளித்தனர். வனத்துறையினர் காட்டு யானைகள் ஏறி வர வசதியாகக் கிணற்றின் ஒரு பகுதியை இடித்துச் சாய்வுத் தளம் போன்று அமைத்தனர். இதைத்தொடர்ந்து யானைகள் ஒன்றின் பின் ஒன்றாகக் கிணற்றிலிருந்து வெளியேறியது. 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் 3 காட்டு யானைகளும் மீட்கப்பட்டு, வனத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டன.

தெரியுமா?

கவிஞர் வைரமுத்து தன் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ எனும் நாவலுக்காகச் சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism