Published:Updated:

600 அடி குழியில் தவறி விழுந்த சிறுமியை மீட்க போராட்டம் (படங்கள்)

600 அடி குழியில் தவறி விழுந்த சிறுமியை மீட்க போராட்டம் (படங்கள்)
600 அடி குழியில் தவறி விழுந்த சிறுமியை மீட்க போராட்டம் (படங்கள்)

கரூர் மாவட்டம்,  துரியம்பாளையம் அருகே 600 அடி கொண்ட போர்வெல் குழியில் தவறி விழுந்த சிறுமியை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

600 அடி குழியில் தவறி விழுந்த சிறுமியை மீட்க போராட்டம் (படங்கள்)

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட துரியம்பாளையம் அருகே உள்ள பாதிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். தனியார் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வந்து விவசாயம் செய்து வருகிறார்.

600 அடி குழியில் தவறி விழுந்த சிறுமியை மீட்க போராட்டம் (படங்கள்)

பள்ளிக்கு இன்று விடுமுறை என்பதால் தனது 7 வயது மகள் முத்துலெட்சுமியை அழைத்துக் கொண்டு  அருகில் உள்ள தோட்டத்தி்ல் முருங்கை காய் பறிக்க சென்றுள்ளார் முத்துப்பாண்டியன்.

600 அடி குழியில் தவறி விழுந்த சிறுமியை மீட்க போராட்டம் (படங்கள்)

அப்போது, அந்த தோட்டத்தில் போடப்பட்டிருந்த 600 அடி  போர்வெல் குழியில் சிறுமி முத்துலெட்சுமி தவறி விழுந்து விட்டாள். 12 அடி ஆழத்தில் மகள் சிக்கி தவிப்பதை பார்த்து அலறி துடித்த பாண்டியன், இது குறி்த்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

600 அடி குழியில் தவறி விழுந்த சிறுமியை மீட்க போராட்டம் (படங்கள்)

இதையடுத்து, காவல்துறையினர், தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் இரண்டு பொக்லைன்  எந்திரங்கள் வரவழைக்கப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
 

600 அடி குழியில் தவறி விழுந்த சிறுமியை மீட்க போராட்டம் (படங்கள்)

இதையடுத்து, சிறுமி விழுந்த ஆழ்துளை குழியின் அருகில் அதிவேக சக்தி கொண்ட இரண்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. இரண்டு அடி பள்ளம் தோண்டுவதற்குள் பாறை இருந்ததால் தோண்ட முடியவில்லை.
 

600 அடி குழியில் தவறி விழுந்த சிறுமியை மீட்க போராட்டம் (படங்கள்)

இதைத் தொடர்ந்து, துளையிடும் மிஷின் மூலம் பள்ளம் எடுக்கப்பட்டு வருகிறது. சிறுமியின் சுவாசத்துக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுள்ளது. சேலையை பிடித்தபடி 12 ஆழத்தில் உள்ள சிறுமி அந்தரத்தில் இருக்கிறாள்.

முதலில் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த சிறுமி,  தற்போது மயக்கம் அடைந்து விட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காலை 7 மணிக்கு குழியில் சிறுமி முத்துலெட்சுமி விழுந்துள்ளாள். 7 மணி நேரம் ஆகியும் சிறுமி இன்னும் மீட்கப்படவில்லை. மீட்பு பணி தாமதத்துக்கு பாறைகளே காரணம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இருந்தாலும் இன்னும் 3 மணி நேரத்தில் சிறுமியை மீட்டு விடுவோம் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சம்பவ இடத்தை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார். 
 

சாதிக் பாட்சா