மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்த நாள்!

அமெரிக்காவின் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் காலடி எடுத்து வைத்த நாள், ஜூலை-20, 1969. `சந்திரனில் தரை இறங்கிய முதல் மனிதர்’ என்ற பெருமைக்குரியவர். விமானி, பேராசிரியர், போர் வீரர் போன்று பன்முகம்கொண்டவர். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்து வைத்ததைத் தொடர்ந்து, விண்கலத்தில் ஆம்ஸ்ட்ராங்குடன் பயணித்த எட்வின் ஆல்ட்ரினும் தரை இறங்கினார்.

பாலகங்காதர திலகர் பிறந்த நாள்!

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், சமூகச் சீர்திருத்தவாதி, பத்திரிகையாளர் எனப் பன்முகம்கொண்டவர். `சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன்’ என முழங்கியவர். 1881-ம் ஆண்டு கேசரி, மராத்தா என்ற இரண்டு பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினார். `கேசரி’ அன்றைய தினத்தில் அதிகம் விற்பனையான பத்திரிகை. 1907-ம் ஆண்டு காங்கிரஸ் தீவிரவாதக்கொள்கை உடையவர்கள், மிதவாதக்கொள்கை உடையவர்கள் என்று இரண்டாகப் பிரிந்தபோது, தீவிரவாதக்கொள்கையை ஏற்றுப் போராட்டம் நடத்தியவர்.

கார்கில் போர் வெற்றி தினம்!

நமது அண்டைநாடான பாகிஸ்தானுக்கும் நமக்கும் நடந்த போர், கார்கில் போர். 1999 -ம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை நடைபெற்றது. இந்தப் போர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் `கார்கில்’ அருகே நடந்ததால் `கார்கில் போர்’ என்று அழைக்கப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்த கார்கிலை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட `ஆபரேஷன் விஜய்’ வெற்றிபெற்றது. இந்தியா, கார்கிலை மீட்டது.

அப்துல் கலாம் நினைவு நாள்!

இந்திய மக்களின் பேரன்பைப் பெற்ற ஜனாதிபதி. `மக்களின் ஜனாதிபதி’ எனப் பாராட்டப்பட்டவர். ராக்கெட் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தி, இந்தியாவின் பல செயற்கைக்கோள்களை விண்வெளியில் மிதக்கவிட்டவர். அதனால் `ராக்கெட் மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார். மிகச்சிறந்த அணு விஞ்ஞானியாகத் திகழ்ந்தவர். தாய்நாட்டுக்குச் சேவைசெய்ய வேண்டும் என்பதில் தணியாத தாகம்கொண்டு உழைத்தவர்.

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பிறந்த நாள்!

தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர்களுள் ஒருவர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாடல்கள், வாழ்வியல் போராட்டக் கவிதைகள், சமூகப் பாடல்கள், தேசியப் பாடல்கள் எனப் பரந்து விரிந்த தளத்தில் செயல்பட்டவர். கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர். ஆசிரியராக 36 ஆண்டுகள் பணியாற்றினார். `மலரும் மாலையும்’, `ஆசிய ஜோதி’ ஆகியவை இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவை.

தெரியுமா?

நமது மாநிலத்துக்கு ‘தமிழ் நாடு’ எனப் பெயர் மாற்றப்பட்ட நாள், ஜனவரி 4, 1969