பாதுகாப்பான பயணம்..!

அவர் பெயர் ஆதர்ஷ். வெளியூர் செல்வதற்காக ரயிலில் ஏறுகிறார். அங்கே விநோதமான ஒரு காட்சியைப் பார்க்கிறார்.

அந்தப் பெட்டியில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுமிகள் இருக்கிறார்கள். யாருடைய முகத்திலும் மகிழ்ச்சியில்லை. பயமும் கலவரமும்தான் தெரிகின்றன. `அவர்களை யாரோ கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறார்களோ!’ என்று ஆதர்ஷுக்குச் சந்தேகம் வருகிறது. உடனே, அவர் தன்னுடைய மொபைல்போனில் இந்திய ரயில்வே துறைக்கு ஒரு ட்வீட் அனுப்பி, `இந்த ரயிலில் இந்தப் பெட்டியில் இப்படியொரு பிரச்னை’ என விளக்குகிறார்.

அடுத்த ரயில்நிலையத்தில் இரண்டு காவலர்கள் சாதாரண உடையில் அந்தப் பெட்டியில் ஏறிக்கொள்கிறார்கள். உள்ளே என்ன நடக்கிறது என விசாரிக்கிறார்கள். ஆதர்ஷ் நினைத்ததைப்போல, அந்தச் சிறுமிகள் எல்லாரும் எங்கோ கடத்திச் செல்லப் படுகிறார்கள் என்பது தெரியவருகிறது. அவர்களைக் கடத்திய இருவரையும் கைதுசெய்கிறது காவல்துறை. சிறுமிகளை அவரவர் வீட்டுக்கு அனுப்பும் முயற்சிகள் தொடங்குகின்றன.

விழிப்புஉணர்வுள்ள குடிமக்கள் இருந்தால் எப்படிப்பட்ட குற்றத்தையும் கண்டுபிடித்துத் தடுத்துவிடலாம் என்பதற்கு, இந்தச் சம்பவம் ஒரு சான்று.

நொய்டாவில் சாம்சங்..!

உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை, உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் உருவாகப்போகிறது. புகழ்பெற்ற எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான தென்கொரியாவின் `சாம்சங்’, இந்தத் தொழிற்சாலையை அமைக்கவிருக்கிறது. 5,000 கோடி ரூபாய் செலவில் இந்தத் தொழிற்சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் இருவரும் கையெழுத்திட்டனர்.

``உலக அளவில் மொபைல் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தத் தொழிற்சாலை, இந்தியாவை உற்பத்தித் துறையின் மையத்துக்குக் கொண்டுவரும்; பல்லாயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்’’ என்றும் கூறினார் மோடி.

ஹீலியம்-3

`நிலாவில் ஹீலியம்-3 நிறைய இருக்கிறது, அதைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் இந்தியா இறங்கியிருக்கிறது.

அதென்ன ஹீலியம்-3?

நிலவின் மேற்பரப்பில் மிகுதியாகக் கிடைக்கும் வேதிப்பொருள்தான், ஹீலியம்-3. பாதுகாப்பான அணு ஆற்றலை உருவாக்க இதைப் பயன்படுத்தலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். இது பூமியிலும் கிடைக்கிறது. ஆனால், இங்கு அது மிகவும் அபூர்வமான பொருள் என்பதால், விலை அதிகம்.

``எந்த நாடு ஹீலியம்-3ஐ பூமிக்குக் கொண்டுவருகிறதோ, அந்த நாடு இந்த ஆராய்ச்சியில் முன்னணியில் நிற்கும். இந்த விஷயத்தில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். இதற்கான முயற்சிகளை இந்தியா முன்னின்று நடத்தும்!’’ என்றார் ISRO தலைவர் கே.சிவன்.

ரோபோக்களை உருவாக்கலாம் வாங்க!

திரைப்படம் மற்றும் கதைகளில் வருவதுபோல, `ரோபோ’ எனப்படும் இயந்திர மனிதர்கள்தானாகச் செயல்படுவதில்லை. அவை இப்படித்தான் செயல்பட வேண்டும் எனத் தீர்மானித்து, அதற்கேற்ப வடிவமைப்பது மனிதர்கள்தான். எடுத்துக்காட்டாக, கட்டுமானத்துறை, மருத்துவத்துறை, தொழில்துறை போன்றவற்றின் குறிப்பிட்டத் தேவைகளை, இப்படி வடிவமைக்கப்படும் இயந்திர மனிதர்கள்தாம் பூர்த்திசெய்கிறார்கள். இந்தத் துறை `ரொபோடிக்ஸ்’ என்றழைக்கப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவில் ரொபோடிக்ஸ் பணிவாய்ப்புகள் 191 சதவிகிதம் அதிகரித்திருக்கின்றன என்கிறது புகழ்பெற்ற வேலைவாய்ப்பு இணையதளமான `Indeed’. இதே காலகட்டத்தில் ரொபோடிக்ஸ் துறையில் நுழைய விரும்புகிறவர்களுடைய எண்ணிக்கையும் 186 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம். அடுத்த சில ஆண்டில், இந்த வளர்ச்சி இன்னும் அதிகரிக்கப்போவதாகச் சொல்கிறது `Indeed’. இந்தியர்களுக்கு இந்தத் துறையில் இருக்கும் ஆர்வம் காரணமாக, உலக அளவில் நமக்கான வாய்ப்புகள் ஏராளமாகக் காத்திருக்கின்றன.

தெரியுமா?

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி பிறந்தது, புதுக்கோட்டை.