Published:Updated:

வைகிங் படகு

வைகிங் படகு
பிரீமியம் ஸ்டோரி
வைகிங் படகு

தகவல்மு. பிரசன்ன வெங்கடேஷ்

வைகிங் படகு

தகவல்மு. பிரசன்ன வெங்கடேஷ்

Published:Updated:
வைகிங் படகு
பிரீமியம் ஸ்டோரி
வைகிங் படகு

டக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்கேன்டிநேவியாவுக்கு என வலுவான வரலாறு ஒன்று உண்டு. டென்மார்க், நார்வே, ஸ்வீடன் ஆகிய மூன்று நாடுகளை முழுவதுமாக உள்ளடக்கியும், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்தின் எல்லைப் பகுதிகள் சிலவற்றை உள்ளடக்கியும் உள்ள நிலப்பகுதி மொத்தமாக ஸ்கேன்டிநேவியா என்றழைக்கப்பட்டது. இந்த வடக்கு ஐரோப்பாவில் வாழும் மக்களே ‘வைக்கிங்ஸ்’ என்றழைக்கப்பட்டனர். கி.பி. 793 - 1066, வரலாற்றின் இந்தக் காலகட்டத்தில் வடக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த இந்த மக்கள் போருக்காவும் வணிகத்துக்காவும் கடல் கடந்தும் மேற்கு, கிழக்கு ஐரோப்பாவுக்குப் பயணம் மேற்கொண்டனர். இந்த வைக்கிங் மக்கள் அதிகமாகப் போரும் வணிகமும் செய்த இந்த 8-ம் நூற்றாண்டு முதல் 11-ம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டமே ‘வைக்கிங் ஏஜ்’ என்றழைக்கப்படுகிறது. வரலாற்றின் பல இடங்களில் வைக்கிங் வீரர்கள் கொடூரமான போராளிகளாக, வீரர்களாக அவர்களின் எதிரிகளால் பதிவு செய்யப்படுகிறார்கள். அந்தக் காலகட்டத்தில் அவர்கள் பயணங்களுக்காகப் பயன்பட்ட கப்பல்களே ‘வைக்கிங் படகு’ என்றழைக்கப்படுகிறது. இந்த வைக்கிங் படகுகள் அதன் தேவைக்கேற்றவாறு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.

வைகிங் படகு

மீன்பிடிப்பதற்காகவும் சிறுபயணங்களை மேற்கொள்வதற்காகவும் சிறிய வைக்கிங் படகுகள் உருவாக்கப்பட்டிருந்தன. இவை உள்நாட்டிலேயே ஆறுகள் மற்றும் கடலின் எல்லையோரங்களில் பயன்படுத்தப்பட்டன. போருக்காகப் பயன்படுத்தப்படும் வைக்கிங் கப்பல்களானது வேகமாக இயங்கும் வகையிலும் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு ஏதுவாகவும் வடிவமைக் கப்பட்டிருந்தன. இந்த வகையிலான போருக்காகப் பயன்படுத்தப்படும் கப்பல்கள் ‘டிராகன் ஷிப்’ அல்லது ‘லாங் ஷிப்’ என்றழைக்கப்பட்டன. அதேபோலபயணங்கள் மற்றும் வணிகம் மேற்கொள்வதற்காக மெதுவாகச் செய்யும் கப்பல்களும் அந்தக் காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்தன, அவை ‘நார்’ ( knorrs) என்றழைக்கப்பட்டன. இந்த வைக்கிங் கப்பல்கள் அல்லது படகுகளின் தேவை எதுவாக இருப்பினும் அவை அனைத்தின் கட்டுமானத்திலுள் ஓர் ஒற்றுமை மட்டும் உண்டு. அதாவது எந்த வைக்கிங் கப்பலானாலும் ஆழமற்ற தண்ணீரிலும் தடங்கல் இல்லாமல் பயணம் செய்யும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தன. எனவே, போருக்குச் செல்லும் கப்பல்களைக் கரை வரை கொண்டுசென்று எதிரி நாட்டைத் தாக்கலாம், தாக்குதல் முடிந்ததும் சட்டென்று கப்பலை இயக்கி வேகமாகத் தப்பிக்கவும் இந்த வைக்கிங் கப்பல்கள் வசதியாக இருந்தன. வணிகக் கப்பல்களை ஆழமற்ற கரைவரை கொண்டுசெல்லும் போது பொருள்களை ஏற்றி இறக்க வசதியாக இருந்துள்ளன.

இந்த வைக்கிங் கப்பல்கள் பெரும்பாலும் காற்றிலேயே இயங்குமாறு வடிவமைக்கப்பட்டிருந்தன. கப்பலின் நடுவில் பெரிய நீளமான மரக்கட்டை ஒன்று செங்குத்தாக வைக்கப்பட்டு அதில் பாய்மரம் கட்டப்பட்டிருக்கும். காற்று அடிக்கும் நேரத்தில் இந்தப் பாய்மரத்தின் உதவியோடே கப்பல்கள் இயக்கப்பட்டன. காற்று இல்லாத நேரத்தில் கப்பலைச் செலுத்துவதற்காக, கப்பலின் இரண்டு பக்கங்களிலும் பல துடுப்புகளை வைத்திருந்தனர். பெரிய டிராகன் வகை கப்பல்களில் 40 முதல் 60  பேர் வரை பயணம் செய்வதற்கு ஏதுவான மேல்தளமும், அதன் கீழே பொருள்கள் வைப்பதற்கான இடமும் இந்த வகை கப்பல்களில் இருந்தது. ஆனால், தனியறை போன்ற வடிவமைப்பு எந்தக் கப்பலிலும் பயன்படுத்தப்படவில்லை.