Published:Updated:

இந்த நாள்

இந்த நாள்
பிரீமியம் ஸ்டோரி
இந்த நாள்

ஆதலையூர் த.சூர்யகுமார்

இந்த நாள்

ஆதலையூர் த.சூர்யகுமார்

Published:Updated:
இந்த நாள்
பிரீமியம் ஸ்டோரி
இந்த நாள்
இந்த நாள்

தாய்ப்பால் தினம்!

கஸ்ட் முதல் தேதி உலகத் தாய்ப்பால் தினமாகவும் ஆகஸ்ட் 1 முதல் 9-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இந்தியாவில் 40 சதவிகிதம் பேர் மட்டுமே தாய்ப்பால் கொடுக்கின்றனர். 5 வயதுக்குள் உள்ள குழந்தைகள் உயிரிழப்புக்கு, நிமோனியா, சளி மற்றும் வயிற்றுக்போக்கு போன்றவையே முக்கியக் காரணம். இதைத் தடுப்பதற்கான அனைத்துச் சக்திகளும், தாய்ப்பாலில் மட்டுமே உள்ளன. அதனால் குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

இந்த நாள்

உலக நண்பர்கள் தினம்!

வ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை `உலக நண்பார்கள் தின’மாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்த தினம் `ஆகஸ்ட்-5’ம் தேதி வருகிறது. உறவுக்கு அப்பாற்பட்ட ஓர் உன்னத உறவு, நட்பு. தமிழர்கள், நட்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் மட்டுமல்ல; இலக்கணமாகத் திகழ்ந்தவர்களும்கூட!

இந்த நாள்

உலக ஹிரோஷிமா தினம்!

ரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் நகரமான ஹிரோஷிமா மீது 1945-ம் வருடம் ஆகஸ்ட் 6-ம் தேதி அமெரிக்கா அணுகுண்டு வீசித் தாக்கிய நினைவுநாள். அணுகுண்டு பாதிப்பால் ஹிரோஷிமா நகரில் பலியான பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும்வகையிலும் அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுபோலவே அணுகுண்டுவீச்சுக்கு இலக்கான இன்னொரு ஜப்பான் நகரம் `நாகசாகி’. `ஆகஸ்ட் - 9’ம் தேதியை, நாகசாகி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாள்

சுதந்திர தினம்!

கி.பி.1600-ம் ஆண்டு இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது, `ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி’. ஆனால், தனது கோரமான கைகளால் இந்தியாவைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து ஆளத்தொடங்கியது. எத்தனையோ தொடர் போராட்டங்கள், தலைவர்களின் சிறைத்தண்டனை, உயிர்த் தியாகங்கள் மூலம் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா சுதந்திரம்பெற்றது. சுதந்திர தின நாளில், அவர்களின் தியாகத்தைப் போற்றவேண்டியது நம் கடமை.

இந்த நாள்

ரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம்!

ந்திய தேசியகீதத்தின் ஆசிரியர் என்பது மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால், தெரியாத பல முகங்கள் தாகூருக்கு உண்டு. வங்காளமொழியில் பல்துறை வித்தகர். 19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தார். 1913-ல் `கீதாஞ்சலி’ எனும் கவிதைத் தொகுப்புக்காக நோபல் பரிசு பெற்றார். வங்காள தேசத்தின் தேசியகீதத்தை எழுதியவரும் இவரே!

இந்த நாள்

விக்ரம் சாராபாய் பிறந்த நாள்!

`இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை’ எனக் கொண்டாடப்படுபவர் விக்ரம் சாராபாய். மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி. இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆர்யபட்டாவை விண்ணில் செலுத்துவதற்கு முழுமுதற்காரணம் இவர்தான். செயற்கைகோள் உதவியுடன் தொலைக்காட்சியில் கல்வி கற்பிக்கும் முயற்சிமூலம், 2,400 இந்திய கிராமங்களில் உள்ள 50 லட்சம் மக்களுக்குக் கல்வியைப் போதிக்க உதவினார்.

தெரியுமா?

வி
மானம் பறக்கும் உயரத்தை ‘ஆல்டி மீட்டர்’ எனும் கருவியால் அளக்கிறார்கள்.