Published:Updated:

உலகம்

உலகம்
பிரீமியம் ஸ்டோரி
உலகம்

ச.ஸ்ரீராம்

உலகம்

ச.ஸ்ரீராம்

Published:Updated:
உலகம்
பிரீமியம் ஸ்டோரி
உலகம்
உலகம்

வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்!

ங்கிலாந்தைச் சேர்ந்த வால்டர் கார் எனும் இளைஞர் வேலைக்குச் செல்வதற்காகப் புறப்பட்டபோது, அவரது கார் பழுதடைந்துள்ளது  தெரிய வந்தது. அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், நள்ளிரவிலேயே நடக்கத் தொடங்கிவிட்டாராம். நிறுவனம் அவர் இருக்கும் இடத்திலிருந்து 20 மைல் தூரம். இந்தத் தகவல் ஃபேஸ்புக் மூலம் வைரலானது. இதை அறிந்த அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ அவருக்குப் புதிய கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்.

உலகம்
உலகம்

ருவாண்டாவுக்கு இந்தியப் பசுக்கள்..!

பிரதமர் மோடி ருவாண்டா, உகாண்டா, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் ஜூலை 23-ம் தேதி முதல் ஐந்து நாள்கள் சுற்றுப்பயணம் செய்தார். முதலாவதாக ருவாண்டா நாட்டுக்குச் சென்ற மோடி, அந்நாட்டில் செயல்படுத்தப்பட்டுவரும் கிரிங்கா திட்டத்தின்கீழ் அதிபர் பால் காகமேவுக்கு 200 பசுக்களைப் பரிசளித்துள்ளார். இதன் மூலம் ருவாண்டாவின் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

உலகம்

மார்க் சாதனையை முறியடித்த ஜென்னர்!

மெரிக்காவைச் சேர்ந்த கைல் ஜென்னர் என்ற 20 வயது பெண், உலகிலேயே இளம் வயதில் மிகப்பெரும் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் என ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கைல் தனது பல்வேறுத் தொழில்கள்மூலம் இளம் வயதில் 900 பில்லியன் டாலருக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார். முன்னதாக, ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க்தான் இளம் வயதில் பெரும் பணக்காரர் என்ற பெயரைப் பெற்றிருந்தார்.

உலகம்

கூகுளுக்கு செக்!

ஸ்மார் ட் போன் செயல்பாட்டுக்குப் பெருமளவில் உதவிவருகிறது ஆண்ட்ராய்ட் மென்பொருள். இதைத் தன்னுடைய வளர்ச்சிக்காகத்    தவறுதலாகப் பயன்படுத்தியதற்காக கூகுள் நிறுவனத்தின்மீது 34 ஆயிரத்து 412 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ஐரோப்பிய யூனியன். இவ்வளவு அபராதத் தொகை செலுத்த முடியாது என மேல் முறையீடு செய்யும் யோசனையில் இருக்கிறது கூகுள் நிறுவனம்.

உலகம்

வரலாறாக மாறிய சுவர்!

தாய்லாந்துக் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க நடைபெற்ற பணிகளை அந்நாட்டு ஓவியக் கலைஞர்கள் தத்ரூபமாக சுவரில் வரைந்து அசத்தியுள்ளனர். ‘ஆர்ட் பிரிட்ஜில்’ என்ற தனியார் கலை நிறுவனத்தின் கலைஞர்களால் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதில், கால்பந்து அணியின் பெயர், குகையில் சிக்கிய சிறுவர்கள், பயிற்சியாளர் மற்றும் மீட்புப் பணியின் உயிரிழந்த முன்னாள் சீல் டைவர் ஆகியோரது முகங்கள் இடம்பெற்றுள்ளன.

தெரியுமா?

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சுதந்திர தினம், ஆகஸ்ட் 14.