Published:Updated:

இந்தியா

இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
இந்தியா

என். சொக்கன்

இந்தியா

என். சொக்கன்

Published:Updated:
இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
இந்தியா

தகவல் தொடர்பில் முன்னேற்றம்!

ந்தியாவில் செல் தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது; சிறிய கிராமங்களிலும் அதிவேக இணையம் கிடைக்கிறது; அதற்கான செலவுகளும் குறைந்துவருகின்றன. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தகவல் தொழில்நுட்பத்தில் நாம் நன்கு முன்னேறிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

ஆனால்,  ஆசியாவில் 4ஜி  தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பார்க்கும்போது, இந்தியாவின் வளர்ச்சி மிகக்குறைவு என்கிறது GSMA Intelligence என்ற ஆய்வு நிறுவனம். இந்த ஆண்டின் முற்பகுதியில் ஆசியாவில், 4ஜி-யின் நுழைவு 44 சதவிகிதமாக இருந்தது. ஆனால், இந்தியாவில் இது வெறும் 21 சதவிகிதம்தானாம்.

இந்தியா

அதேபோல, உலகத் தரத்துடன் ஒப்பிடும்போது நம் இணைய வேகமும் குறைவாகவே உள்ளதாம். இந்த விஷயத்தில் இந்தியா இன்னும் நெடுந்தூரம் செல்லவேண்டியிருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது இவ்வறிக்கை.

இணையம் என்பது முன்பு ஆடம்பரமான ஒன்றாக இருந்தது, இப்போது நம்மை உலகோடு இணைக்கும் கருவியாக இருக்கிறது. முன்னேறிக்கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகள் இதில் இன்னும் ஊக்கத்துடன் செயல்பட்டால், இப்புரட்சியைப் பயன்படுத்திக்கொண்டு அதிவேகமாக வளரலாம்.

‘மகிழ்ச்சி’தான் பாடம்!

டெல்லியில், மாணவர்களுடைய பாடத்திட்டத்தில் புதிதாக ஒரு பாடம் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இது, மற்ற பாடங்களைப்போல புத்தகங்களால் மாணவர்களுக்குச் சுமையை ஏற்றாது, மகிழ்ச்சியைக் கற்றுத்தரும்.

இந்தியா

ஆம், இந்தப் பாடத்தின் பெயரே ‘மகிழ்ச்சி’தான். மாணவர்களுடைய மனநலனை, உணர்வுநலனை மேம்படுத்தும் வகையில் இந்தப் பாடம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆசிரியர்கள், அவர்களுக்குக் கதைசொல்கிறார்கள், சுற்றியிருக்கும் ஒலிகளைக் கவனிக்கக் கற்றுத்தருகிறார்கள், தியானம் சொல்லித்தருகிறார்கள், விளையாட்டுகளால் குழு நடவடிக்கைகளின்மூலம் மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியை உணரச்செய்கிறார்கள்.

இந்தப் புதிய முயற்சிக்கு ஆசிரியர், மாணவர், பெற்றோருடைய வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்ற மாநிலங்களும் இந்தப் புதிய பாடத்தை அறிமுகப்படுத்தலாம்!

கொல்கத்தா கையேந்தி பவன்கள்!

தெருவோர உணவுக்கடைகள் இந்தியக் கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன. இட்லி, தோசை போன்ற உணவுப் பண்டங்களில் தொடங்கி பஜ்ஜி, வடை, முறுக்குப் போன்ற நொறுக்குத்தீனிகள், பழரசங்கள் என்று பலவற்றையும் மக்கள் தெருவோரக் கடைகளில் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். பளபளப்பான கடைகளுக்கு மத்தியில் இந்த எளிய கடைகளிலும் கூட்டம் குவிந்து கொண்டு இருக்கிறது.   இந்தியாவில் நொறுக்குத்தீனிக்குப் புகழ்பெற்ற நகரம் எது என்று சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.அதில் முதலிடத்தைப்பிடித்திருக்கும் நகரம், கொல்கத்தா.

இந்தியா

சைவம், அசைவம், இனிப்பு, காரம் என எல்லா வகை உணவுகளும் சுவையான தேநீரும் கொல்கத்தா சாலைகளில் ஏராளமாகக் கிடைக்கும்.

ஒரே பிரச்னை, கொல்கத்தாவில் அசுத்தம் அதிகம். உணவுப்பொருள்களைத் தெருவோரத்தில் செய்து விற்கும்போது, அதன்மூலம் நோய்கள் பரவும் வாய்ப்பிருக்கிறது. மேற்கு வங்க அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

காலம் தவறாமை தந்த பரிசு!

லக அளவில் விமானங்களை சரியான நேரத்தில் இயக்கும் விமான சேவை நிறுவனங்களின் பட்டியல் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. OAG ஏவியேஷன் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், இந்திய நிறுவனமான IndiGo நான்காவது  இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. 81.22சதவிகித விமானங்களை சரியான நேரத்தில் இயக்கியுள்ள இந்நிறுவனம், சிறந்த பத்து நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நிறுவனமாகும்.

இந்தியா

இண்டிகோவுக்கு முன்னும் பின்னும் இருக்கும் பெரும்பாலான விமான சேவை நிறுவனங்கள் அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளைச்சேர்ந்தவை. இந்தியாபோன்றதொரு வளரும் நாட்டில், இருக்கும் விமானநிலையச் சேவைகளைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு நிறுவனம் உலக அளவில் இப்படி சிறப்பாகச் செயல்படுவது, நிச்சயம் மற்ற எல்லாத் துறைகளுக்கும் ஊக்கம் தரும்.

நிறுவனங்கள்மட்டுமில்லை, நம்மைப்போன்ற தனிநபர்களும் காலம் தவறாமையைக் கற்றுக்கொள்வது நல்லது.

தெரியுமா?

‘இந்தியா 2020’ என்ற நூலின் ஆசிரியர், ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.